இந்தி திரையுலகில் அடுத்தடுத்து பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை, பாலிவுட் மாஃபியா, போதைப்பொருள் புழக்கம், சிவசேனா - கங்கனா மோதல், கொரோனா என அடுத்தடுத்து ஏதாவது ஒன்று கிளம்பி வருகிறது. அந்த வரிசையில் தற்போதைய ஹாட் டாப்பிக் இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வரும் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த பாயல், பட வாய்ப்பிற்காக சென்ற தன்னை அனுராக் காஷ்யப் படுக்கைக்கு அழைத்ததாகவும், அப்போது தனக்கு 200 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட அனுபவம் உண்டு என பெருமையாக கூறியதாகவும் அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தினார். பட வாய்ப்பிற்காக தொடர்பு கொண்ட தன்னை அனுராக் வீட்டிற்கு வரச்சொல்லி முகவரி கொடுத்ததாகவும், ஒரு நடிகை என்ற அடையாளத்துடன் வர வேண்டாம் என்று கூறியதால் சல்வார் கமீஸ் அணிந்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார். முதல் நாள் நல்லபடியாக பேசிய அனுராக் எனக்கு சாப்பாடு கொடுத்து உபசரித்தார். 

 

இதையும் படிங்க: அஜித் மச்சினிச்சி ஷாமிலியா இது?... டாப் ஆங்கிளில் வெளியிட்ட கிளாமர் செல்ஃபி...!

மீண்டும் ஒரு முறை வீட்டிற்கு வரும் படி அழைத்தார். மது அருந்திக் கொண்டிருந்ததுடன், புகைப்பிடித்தார். அது சிகரெட் இல்லை, ஏதோ கெட்ட வாடை வந்தது. அவர் என்னிடம் பேசிக் கொண்டே அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றார். புத்தகங்கல், பழைய வீடியோ கேசட்டுகள் இருந்த அந்த அறையின் சோபாவில் என்னை தள்ளி என்னுடன் வலுக்கட்டாயமாக உறவு கொள்ள முயன்றார். நான் என்னை விட்டு விடும் படி கெஞ்சினேன். அவரும் அடுத்தமுறை வரும் போது மனதளவில் தயராக வா என சொல்லி அனுப்பினார். அதன் பின்னர் நான் அவரை சந்திக்க செல்லவே இல்லை எனக்கூறியிருந்தார். அன்று அவர் தன்னுடன் வலுக்கட்டாயமாக உறவு கொள்ள முயன்றதாக பாயல் முன்வைத்த பகிரங்க குற்றச்சாட்டை அனுராக் மறுத்துள்ளார். 

 

இதையும் படிங்க: “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சித்ரா தனது வருங்கால கணவருடன் வெளியிட்ட அசத்தல் போட்டோ... குவியும் லைக்ஸ்...!

இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், அப்படி ஒரு பெண்ணிடம்   தவறாக நடக்கும் ஆள் இல்லை அனுராக் கஷ்யப் என்று நடிகைகள் டாப்ஸி, ஹூமா குரேஷி மற்றும்  அனுராகின் முன்னாள் மனைவியும், நடிகையுமான நடிகை கல்கி கொச்லின், ஆர்த்தி பஜாஜ் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அனுராக் மீது பாயல் மும்பை காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அனுராக் மீது மும்பை போலீசார் பாலியல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.