ranveer sing kollywood dream

ரன்வீர் சிங்

பல தடைகளுக்கு பின் வெளியான பத்மாவத் படத்தில், பத்மாவதியை அடைய துடிக்கும் கொடூர வில்லனாக அலாவுதீன் கில்ஜியின் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பவர் ரன்வீர் சிங். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இப்படத்தில் ஹீரோயின் தீபிகாவை விட, ரன்வீர் சிங்கின் நடிப்பு அனைவராலும், வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.



நடிக்கும் படங்கள்

பத்மாவத் படத்தை தொடர்ந்து ரன்வீர் சிங் தற்போது "குல்லி பாய்", "சிம்பா" ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஆங்கில மொழியில் நடிக்க ஆவல்

இந்நிலையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரன்வீரிடம், நீங்கள் ஆங்கில மொழி படங்களில் நடிக்க விரும்புகிறீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரன்வீர் சிங் , ஆங்கில மொழியில் ஏதாவது ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன். நான் பள்ளியில் படித்த போது ஆங்கில வழி கல்வியில் தான் படித்தேன். ஆங்கிலம் எனது முக்கிய மொழிப் பாடங்களில் ஒன்றாக இருந்தது. நான் அமெரிக்காவில் படித்தவன். அதனால் எனது இன்னொரு மொழியாக ஆங்கிலத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என விரும்புகிறேன். ஆங்கில படங்களில் நடிக்க சில வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் சில காரணங்களால் அவற்றில் நடிக்க முடியாமல் போனது. ஆனால் சரியான நேரம் வரும் போது, சரியான படத்தில் நடிப்பேன் என நினைக்கிறேன். அதிலும் நல்லதொரு சிறப்பான, நடிப்பை வெளிப்படுத்துவேன் என நினைக்கிறேன் என்று கூறினார்.