ranjinikanth next movie update
இயக்குனராக, தமிழ் சினிமாவில் அறிமுகம் கொடுத்து, தற்போது நடிகர், தயாரிப்பாளர் என பல்வேறு துறையிலும் கலக்கி வருபவர் சமுத்திரக்கனி.
இவர் ரஜினிகாந்தை வைத்து, பா.ரஞ்சித் இயக்கவுள்ள திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்த திரைப்படத்தில், பாலிவுட் நடிகை ஹூமா குரேஷ் நடிக்க உள்ளதாக வெளிவந்த தகவலை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில், பா. ரஞ்சித்தின் படத்தில் தொடர்ந்து நடித்து வரும் நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார் என கூறப்படுகிறது. மேலும் 'பாகுபலி 2' படத்தின் VFX டெக்னீஷய்ன் பீட்டர் டிராப்பர் இணைந்துள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 28ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
