சிவகார்த்தியின் ஜோடி ராணிமுகர்ஜியா!?: கமல் கவனிக்கணும் இதை. 

*    சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் நுழைந்து, அப்படியே சில பல படங்களை ஓட்டியவர் ஆர்யா. ஆனால் பாலாவின் கைபட்டு நான்கடவுள் படம் மூலம் ‘நடிகன்’ ஆக அறியப்பட்டார். ஆனால் அவரது கெட்ட நேரம் சரியான வாய்ப்பின்றி தொலைந்து போனார். இந்நிலையில், பா.ரஞ்சித் இயக்கும் வடசென்னை வட்டார படத்துக்காக பாக்சராக மாறி இருக்கிறார் ஆர்யா. இதற்காக தன் உடம்பை பாறையை போல் இறுக்கி, முறுக்கியிருக்கிறார். சாக்லெட் பாய் முகம் சப்பிப் போனதை பற்றி துளியும் கவலையில்லாமல் இருக்கிறார். 
(கலைஞன்யா நீ)

*    சிவகார்த்திகேயன் நடிக்கும், ‘டாக்டர்’ படத்தில் அவரது ஹீரோயினாக பிரியங்கா அருள் மோகன் எனும் புதுமுக நடிகை இணைந்திருக்கிறார். ஏற்கனவே கன்னட, தெலுங்கு சினிமாவில் நடித்த இவரது முதல் தமிழ் படமான ‘மாயன்’ இன்னும் முடியவே இல்லை. அதற்குள் எஸ்.கே.வுடன் செம்ம டூயட் வாய்ப்பு. இந்த நிலையில் பிரியங்காவை ‘ராணி முகர்ஜி மாதிரி இருக்கீங்க!’ என்று தமிழ் சினிமா வட்டாரத்தில் கொண்டாட துவங்கியுள்ளனர். 
(கமல்ஹாசன் கவனிக்கவும்)

*    இந்தியன் 2வில் காஜல் இருக்கிறார் என்பது அரதப் பழைய செய்தி. தனது கேரக்டர் பற்றியும், தன் ஸ்பெஷல் மேக் - அப் கிட் பற்றியும் அவர் விஷயங்களை  வெளிப்படையாக லீக் செய்து ஷங்கரிடம் வாங்கிக் கட்டினார். இந்நிலையில் அந்தப் படத்தின் செட்டில் விபத்து நடந்து மூன்று பேர் இறந்த விவகாரத்தால் காஜல் மிக மோசமாக மனம் பாதிக்கப்பட்டுள்ளார். இதை ‘என்னால் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. அந்த ஒரு நொடிதான், உயிரின் மதிப்பை உணர்ந்தேன்’ என்கிறார். கூடவே அந்த விபத்தில் இறந்த சக பணியாளர்களுக்காக வருந்தியுள்ளார். 
(ரெஸ்ட் இன் பீஸ்)

 

*    தனக்கு போலீஸ் கதாபாத்திரம் பக்காவாக செட் - ஆவதால் தொடர்ந்து அதிலேயே நடிப்பதாக அருண் விஜய் கூறியுள்ளார். இந்நிலையில் மாஃபியா படத்தை பற்றி கூறுகையில் ’இயக்குநர் நரேன் கார்த்திகேயனிடம் நான் என்ன எதிர்பார்த்தேனோ, அதை அவர் கொடுத்தார்’ என்று அருண் விஜய் ஓப்பனாக பேட்டி கொடுத்திருப்பதை நரேன் விரும்பவில்லையாம். 
(ஆரம்பிச்சுட்டாங்களா)


*    விஜய்சேதுபதி, நயன் தாராவுடன் இயக்குநராக மீண்டும் விக்னேஷ் சிவன் இணையும் செம்ம காம்போவில் இந்த முறை சமந்தாவும் இருக்கிறார். ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’  படத்தை வி.சேது மற்றும் நயன் தாராவுக்காகவே ஒப்புக்கொண்டேன். அவர்களுக்கு இடையில் என் திறமையை எப்படி காட்டுவேன் என்பது சர்ப்பரைஸ் சவால்தானே! என்கிறார். 
(தங்கமே!....ன்னு விஜய்சேது இதுல யாரை கொஞ்சுவார்?)
-    விஷ்ணுப்ரியா