’எனக்கு கிட்னி ஃபெயிலியர் ஆனதால் அமெரிக்காவில் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகப் பரவும் தகவல்கள் முட்டாள்தனமானவை’ என்று ஆத்திரத்துடன் கூறுகிறார் ‘பாகுபலி’ராணா.

தமிழில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பரிட்சயமானார் நடிகர் ராணா. அதன் பின்னர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்த  பின்னர் ‘பாகுபலி’ படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமடைந்தார். பாகுபலியில் இவரது உடலமைப்பை கண்டு பலரும் வியந்து போனர். ஆனால், இடையில் அந்தத் தோற்றத்திற்கு தலைகீழாக மிகவும் மெலிந்து காணப்பட்டார் ராணா.

 இதனால் பலரும் நடிகர் ராணாவிற்கு ஏதாவது உடல் நிலை சரியில்லையா என்று சந்தேகித்து வந்தனர். ஆனால், உண்மையில் படத்திற்காக தான் நடிகர் ராணா உடல் எடையை குறைத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கடுமையான உணவு கட்டுப்பட்டால் நடிகர் ராணாவிற்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், முதலில் ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்றுவந்த அவர் மும்பையில் மருத்துவம் பார்த்ததாகவும் அவருக்கு  உடனடியாக சிறுநீரை மாற்று சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறித்தியதாகவும் இதனால் அவருக்கு தனது தயார் தனது சிறுநீரகத்தை தனமாக கொடுத்துள்ளார் என்றும் செய்திகள் பரவின.

அச்செய்திகளின் உச்சமாக அவரது  அறுவை சிகிச்சை அமெரிக்காவில் வெற்றிகரமாக நடித்துள்ளதாகவும் அறுவை சிகிச்சை காரணமாக ராணா 6 மாத காலம் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்றும் செய்திகள் பரவின. இன்று அச்செய்திகளை மிகுந்த ஆத்திரத்துடம் மறுத்துள்ள ராணா, ‘எனது கிட்னி குறித்து வந்த செய்திகள் அத்தனையும் முட்டாள் தனமானவை. எனது அடுத்தபடம் தொடர்பான சில கிராஃபிக்ஸ் கம்பெனிகளைச் சந்திக்கவே இங்கு வந்திருக்கிறேன்’என்கிறார்.