தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் ராணா. கடந்த 2010 ஆம் ஆண்டு, லீடர் என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம் பேர் விருதை பெற்றார்.

இந்த படத்தை தொடர்ந்து, ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்த துவங்கினார். அந்த வகையில் இவர் தமிழில், தல அஜித் நடித்த 'ஆரம்பம்' படத்தில் மிலிட்டரி ஆபீஸராகவும், அஜித்தின் நண்பராகவும் நடித்திருந்தார்.இயக்குனர் எஸ்.எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், வெளியான பாகுபலி படத்தில், பல்வாள் தேவனாக மிரட்டி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார். 

நடிகர் என்பதையும் தாண்டி, பட தயாரிப்பாளர், விஷ்வல் எபெக்ட்  சூப்பர்வைசர், தொகுப்பாளர், விநியோகஸ்தர் என திரையுலகில் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார்.பல ஆண்டுகளாக முரட்டு சிங்கிளாக சுற்றி வந்த ராணா, தொழிலதிபரும், மாடலுமான மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வந்தார். சமீபத்தில் ராணா காதலை சொல்ல மிஹீகாவும் உடனடியாக ஓ.கே. சொல்லிவிட்டார். இதையடுத்து இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. 

இந்தியாவையே ஆட்டி படைக்கும் கொரோனா பிரச்சனை காரணமாக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகு ராணா, மிஹீகாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில்,  மே 20 ஆம் தேதி இருவருக்கும் நெருங்கிய குடும்பத்தினர் மத்தியில் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது, சில தெலுங்கு மீடியாக்களில்... ராணா -  மிஹீகா திருமணம், ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி, நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து, ராணா மற்றும்  மிஹீகா குடும்பத்தினரிடம் இருந்து எந்த ஒரு அதிகார அறிவிப்புகளும் வெளியாகதாதல், இது வந்தந்தியாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.