ramya nambeesan about actress share the bed for movie chance

நடிகைகள் பலர் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்துக் கொள்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்துக்கொண்டிருந்தாலும், கடந்த சில மாதங்களாக இது குறித்து பல நடிகைகள் வெளிப்படையாக கூறி வருகின்றனர். 

அதிலும், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பற்றி பல்வேறு தகவல்களை கூறி அனைவரையும் மிகவும் பரபரப்பாகவே வைத்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி. 

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ரம்யா ரம்பீசன் இது குறித்து கூறுகையில், "பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் திரையுலகில் இல்லை என கூற முடியாது. என் தோழிகள் மூலம் இதனை நான் கேள்விப்பட்டிருகிறேன்.

ஆனால் அதிர்ஷ்ட வசமாக இது போன்ற பிரச்னையை நான் சந்தித்தது இல்லை என தெரிவித்தார். 

தொடந்து இது குறித்து பேசிய இவர், இது போன்ற செயல்கள் திரையுலகில் நடப்பதை பார்த்து தான் வெட்கப்படுவதாகவும், திரையுலகில் மட்டும் அல்ல, அனைத்து துறையிலும் இது போன்ற செயல்களால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என கூறியுள்ளார். 

இதனை எதிர்த்து பெண்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றும் இதுபோன்ற செயல்கள் குறித்து பெண்கள் தைரியமாக வெளியே பேசினால் தான் குற்றம் செய்பவர்களுக்கு பயம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.