பாகுபலி படத்தில் 'ராஜமாதாவாக' நடித்து உலக அளவில் பிரபலமாகிவிட்டார் நடிகை ரம்யா கிருஷ்ணா.  இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை துணிச்சலுடன் தேர்வு செய்து நடித்து ரசிகர்களுடைய பாராட்டைப் பெற்றார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் இவர், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் தமிழ்வாணன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா, அமிதாப் பச்சன் நடித்துவரும் திரைப்படம் 'உயர்ந்த மனிதன்'. இந்தப் படம் தமிழ், ஹிந்தி, ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில்தான் நடிகை ரம்யா கிருஷ்ணா... அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல், விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் முதல் முறையாக அமிதாப்பச்சன் தமிழில் அறிமுகமாக உள்ளார். இதில் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு மிகவும் வலுவான கதாப்பாத்திரம் என கூறப்படுகிறது.