தமிழ் படவுலகில் நடித்து வெற்றிபெறாத, சில நாயகிகள் தெலுங்கு பட உலகிற்கு சென்று, முன்னணி கதாநாயகிகளாக வளர்ந்துள்ளனர்.

இதற்கு முக்கிய உதாரணம், நடிகை விஜயசாந்தி, ரம்யா கிருஷ்ணன், அஞ்சலி, ரெஜினா, ரகுல் பிரீத் சிங், என அப்போதில் இருந்து இப்போது வரை பல நடிகைகளை குறிப்பிடலாம்.

அந்த வரிசையில் இடம் பெற்ற நடிகை ரம்யா கிருஷ்ணன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'படையப்பா' படத்தில் நீலாம்பரியாக நடித்து, ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றார். மேலும் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தில் அவர் நடித்த ராஜமாதா கதாபாத்திரம் அவரை மீண்டும் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

இதனால் தற்போது இவருக்கு, புது பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அவற்றில் கனமான கதாபாத்திரத்தை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் திரைக்கு வந்த 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் அவர் விலைமாதுவாக துணிச்சலுடன் நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்து வரும் ஒரு தெலுங்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதே படத்தில்  நடிகை விஜயசாந்தியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 

இவரும் ரம்யா கிருஷ்ணனுக்கு இணையாக தமிழ் , தெலுங்கு பட உலகில் அசைக்க முடியாத ஆக்ஷன் நாயகி என பெயர் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.