வதந்தி

மறைந்த நடிகை ஸ்ரீதேவி பற்றி சமூக வலைத்தளங்களில் பல வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதில் முக்கியமாக சொல்லப்படுவது ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தை சர்ச்சை இயக்குனரான ராம் கோபால் வர்மா எடுக்க போகிறார் என்பதுதான்.

மரணம்

துபாயில் திருமண நிகழ்வுக்காக சென்றிருந்த ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் நீரில் மூழ்கி கடந்த பிப்ரவரி 24 ம் உயிரிழந்தார்.அதிலிருந்து ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

சோகம்

ஸ்ரீதேவி இறந்ததிலிருந்து அவரின் தீவிர ரசிகரான இயக்குனர் ராம் கோபால் வர்மா டிவிட்டரில் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.என்னை ஏன் கடவுள் அழைத்து போகவில்லை என்று சோகமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

சர்ச்சை

இந்நிலையில் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்துக்கு ராம் கோபால் வர்மா சர்ச்சையளிக்கும் விதமாக தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் நான் ஸ்ரீதேவி பற்றி ஒரு படம் இயக்க போவதாக செய்திகள் உலா வருகிறது.

திறமை

அதில் உண்மை இல்லை.அப்படி செய்வது ஒரு முட்டாள்தனம் என்றுதான் கூறுவேன் அவரை போல் நடிக்க எந்த ஒரு நடிகைக்கும் திறமை இல்லை என்று பதிவிட்டுள்ளார்.