ramgopal varma twit feel for sucide


சரச்சை

சர்ச்சையின் மறு உருவம் பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா.இவர் எது பேசினாலும் என்ன செய்தாலும் அதில் சர்ச்சை வெடிக்கும்.சமீபத்தில் கூட ஆபாச நடிகையை வைத்து 'காட் செக்ஸ் அண்ட் ட்ருத்' என்ற குறும்படத்தை எடுத்து சர்ச்சையில் சிக்கினார்.இது இப்படி இருக்க ஸ்ரீதேவி மரணத்திற்கு இவர் போட்டுள்ள ட்விட் தான் தற்போது சர்ச்சையை உண்டாகியிருக்கிறது.

மாரடைப்பு

கடந்த மூன்று நாட்களாக எங்கு பார்த்தாலும் ஸ்ரீதேவியின் மரணம் பற்றிய பேச்சுகள்தான்.
திருமண விழா ஒன்றிற்காக தனது கணவர் மற்றும் இரண்டாவது மகளுடன் துபாய் சென்றிருந்தார் ஸ்ரீதேவி.அப்போது குளியலைறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

ஆல்கஹால்

இதையடுத்து தற்போது வெளியாகியுள்ள பிரேத பரிசோதனை அறிக்கையின் படி அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதாகவும் அதிகப்படியான போதையால் குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்திருக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது ஒரு விபத்து என்று கூறப்பட்டுள்ளது. 

கருத்து

இந்தநிலையில் ஸ்ரீதேவியின் மரணம் பற்றி பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அவரின் தீவிர ரசிகரான ராம் கோபால் வர்மா தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

தற்கொலை

அதில் எந்த மனிதரின் வாழ்க்கை முடிவானது இவ்வளவு கொடூரமாக, சோகமாக இருந்ததுண்டா? அவர் மரணமடைந்து விட்டார் எந்த தகவலை கேட்டத்திலிருந்து தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…