MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • Trisha: டீலே இதுதான்.! விராலிமலையில் த்ரிஷா போட்டி.?! வெற்றி கனியை தட்டி தருவதாக விஜயபாஸ்கர் உறுதி.!

Trisha: டீலே இதுதான்.! விராலிமலையில் த்ரிஷா போட்டி.?! வெற்றி கனியை தட்டி தருவதாக விஜயபாஸ்கர் உறுதி.!

விராலிமலை தொகுதியில் நடிகை த்ரிஷாவை நிறுத்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருடன் முதல்வர் விஜய் டீல் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக, உதயநிதி ஸ்டாலின் த்ரிஷாவை எதிர்க்க மற்றொரு பிரபல நடிகையை களமிறக்க திட்டமிட்டுள்ளார் எனவும் தெரிகிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 30 2026, 01:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
டீல் போட்ட விஜய்.! டிக் அடித்த விஜயபாஸ்கர்.!
Image Credit : Instagram

டீல் போட்ட விஜய்.! டிக் அடித்த விஜயபாஸ்கர்.!

தமிழக அரசியல் களம் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்குப் பெயர் பெற்றது. சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவதும், அவர்களுக்குப் பின்னால் பெரும் அரசியல் நகர்வுகள் நடப்பதும் காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது ஒரு புதிய தகவல். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான விஜய், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் பிரபல நடிகை த்ரிஷாவை நிறுத்தப் போவதாகவும், அதற்காக முன்னாள் அமைச்சர் சி.வி.விஜயபாஸ்கருடன் ஒரு மெகா 'டீல்' பேசியிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தொற்றியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
விராலிமலையில் த்ரிஷா? பின்னணியில் இருக்கும் ‘டீல்’!
Image Credit : X

விராலிமலையில் த்ரிஷா? பின்னணியில் இருக்கும் ‘டீல்’!

கடந்த சில நாட்களாகவே, தளபதி விஜய்யின் தவெக கட்சியில் முக்கிய சினிமா முகங்கள் இணையப் போவதாகப் பேச்சுகள் அடிபட்டன. அதில் முதன்மையானவராக நடிகை த்ரிஷாவின் பெயர் அடிபட்டது. தற்போதைய தகவல்களின்படி, விராலிமலை தொகுதி இடைத்தேர்தலில் த்ரிஷாவை தவெக வேட்பாளராகக் களம் இறக்க விஜய் தரப்பு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்காக, அந்தத் தொகுதியில் வலுவான செல்வாக்குக் கொண்ட முன்னாள் அதிமுக அமைச்சரான சி.வி.விஜயபாஸ்கருடன் விஜய் தரப்பு ஒரு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. விராலிமலையில் த்ரிஷாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க விஜயபாஸ்கர் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதே தவெக போட்ட 'டீல்' எனக் கூறப்படுகிறது.

Related Articles

Related image1
EPS Meet Sasikala: சின்னம்மா ரிட்டன்ஸ்.! கட்சியை காப்பாற்ற சசிகலாவை சந்திகும் எடப்பாடி.?! மீண்டும் துளிர்க்கும் "இரட்டை இலை" என பறக்கும் மீம்ஸ்.!
Related image2
Now Playing
CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"?
36
விஜயபாஸ்கருக்கு விஜய் கொடுத்த உறுதி!
Image Credit : Instagram

விஜயபாஸ்கருக்கு விஜய் கொடுத்த உறுதி!

அதிமுகவில் இருந்தாலும், தொகுதிக்குள் தனிப்பட்ட முறையில் பெரும் செல்வாக்குக் கொண்டவர் விஜயபாஸ்கர். தவெக-வின் இந்த கோரிக்கைக்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன. த்ரிஷாவின் வெற்றிக் கனியைத் தட்டித் தருவதாக அவர் உறுதி அளித்துள்ளாராம்.

இதற்குப் பிரதிபலனாக விஜயபாஸ்கருக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த, அதிகாரமிக்க பதவி ஒன்று வழங்கப்படும் என விஜய் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தத் தகவல் வெளியானதில் இருந்தே, விராலிமலையில் த்ரிஷாவை வரவேற்கவும், தேர்தல் வேலைகளைப் பார்க்கவும் தளபதி ரசிகர்கள் இப்போதே தங்களைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

46
உதயநிதியின் ‘சர்ப்ரைஸ்’ வியூகம்: திரையுலகில் இருந்து எழும் வேட்பாளர்!
Image Credit : our own

உதயநிதியின் ‘சர்ப்ரைஸ்’ வியூகம்: திரையுலகில் இருந்து எழும் வேட்பாளர்!

இந்த விவகாரம் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்புக்கு எட்டவே, அவர்களும் சும்மா இருக்கப் போவதில்லை என அதிரடி வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டனர். த்ரிஷாவின் வருகை தவெக-விற்குப் பெரும் பலமாக மாறும் என்பதை உணர்ந்த எதிர்க்கட்சிகள், அவரைத் தோற்கடிக்க அதைவிடப் பெரிய ‘மாஸ்டர் பிளான்’ ஒன்றை கையில் எடுத்துள்ளன.

த்ரிஷாவை எதிர்கொள்ள, அவரை விடப் பிரபலமான, தமிழக மக்களிடம் பெரும் செல்வாக்குக் கொண்ட ஒரு முன்னணி நடிகையை விராலிமலையில் களம் இறக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இதற்கான பேச்சுவார்த்தையில் திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் நேரடியாக இறங்கியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. அந்தப் பிரபல நடிகையுடன் உதயநிதி நடத்திய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துவிட்டதாகவும், அவர் விராலிமலையில் போட்டியிடச் சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

56
ரகசியம் காக்கும் ‘உடன்பிறப்புகள்’!
Image Credit : our own

ரகசியம் காக்கும் ‘உடன்பிறப்புகள்’!

இருப்பினும், த்ரிஷாவுக்கு எதிராகப் போட்டியிடப் போகும் அந்தப் மாஸ் நடிகை யார் என்ற விவரத்தை தற்போதைக்குத் துளிரும் கசியவிடக் கூடாது என்பதில் எதிர்க்கட்சித் தலைமை மிகவும் தீவிரமாக உள்ளது. இதனை ஒரு ‘சீக்ரெட்’ ஆயுதமாக அவர்கள் வைத்துள்ளனர்.

சரியான நேரத்தில், தேர்தல் களம் சூடுபிடிக்கும் போது அந்த நடிகையின் பெயரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, ஒட்டுமொத்த தமிழக மக்களையே ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்துவோம் என திமுக உடன்பிறப்புகள் ரகசியம் பேசி வருகின்றனர்.

66
சுவாரஸ்யமான தேர்தல் களம்!
Image Credit : Instagram

சுவாரஸ்யமான தேர்தல் களம்!

இடை தேர்தலில் விராலிமலை தொகுதியில் த்ரிஷா போட்டியிடும் நிலையில் அத்தொகுதி  தமிழகத்தின் விஐபி தொகுதியாக மாறும். ஒருபுறம் விஜய் - விஜயபாஸ்கர் கூட்டணியின் ஆதரவோடு த்ரிஷா, மறுபுறம் உதயநிதி ஸ்டாலினின் ‘சர்ப்ரைஸ்’ மூவ் மூலம் களமிறக்கப்படும் மற்றொரு முன்னணி நடிகை என விராலிமலை களம் இரண்டு சினிமா நட்சத்திரங்களின் அக்னிப் பரீட்சையாக மாறப் போகிறது. இந்த நட்சத்திரப் போரில் வெற்றிக் கனியைப் பறிக்கப் போவது யார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இடைத்தேர்தல் தேதி அறிவித்தால் அவ்ளோதான் தமிழக மக்களுக்கு தினமும் விருந்துதான்.! அதாங்க செய்தி விருந்து.!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்படம்
திரைப்பட விமர்சனம்
அரசியல்
விஜய் (நடிகர்)
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
EPS Meet Sasikala: சின்னம்மா ரிட்டன்ஸ்.! கட்சியை காப்பாற்ற சசிகலாவை சந்திகும் எடப்பாடி.?! மீண்டும் துளிர்க்கும் "இரட்டை இலை" என பறக்கும் மீம்ஸ்.!
Recommended image2
திமுக, அதிமுகவுக்கு விஜய் வைத்த செக்! 16 தொகுதிகளில் நடக்கப்போகும் ‘அந்த’ சம்பவம்..அலறும் அறிவாலயம்!
Recommended image3
CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"? கதவை இழுத்து மூடிய முதல்வர் விஜய்.?!
Related Stories
Recommended image1
EPS Meet Sasikala: சின்னம்மா ரிட்டன்ஸ்.! கட்சியை காப்பாற்ற சசிகலாவை சந்திகும் எடப்பாடி.?! மீண்டும் துளிர்க்கும் "இரட்டை இலை" என பறக்கும் மீம்ஸ்.!
Recommended image2
Now Playing
CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved