ஷங்கர், ரஜினி கூட்டணியின் 600 கோடி பட்ஜெட் படத்தின் அடிவயிற்றில் அடிப்பது போல் ‘2.0’ குழந்தைகள் மட்டுமே பார்க்கக்கூடிய படம் என்று கமெண்ட் அடித்திருக்கிறார் ட்விட்டர் மன்னன் ராம்கோபால் வர்மா.

தெலுங்கில் ராம்கோபால் வர்மா தயாரித்திருக்கும் கிளுகிளு படமான ‘பைரவா கீதா’ படம் ‘2.0’ ரிலீஸாகும் மறுநாள்30ம் தேதி வெள்ளியன்று ஆந்திராவில் ரிலீஸாகிறது. இப்படத்தின் புரமோஷனுக்கு தனியே ட்விட் பண்ணினால் அது அவ்வளவாக எடுபடாது என்று நினைத்த வர்மா, ரஜினி, ஷங்கர் கூட்டணியில் வரும் ‘2.0’வை வம்பிழுத்தால் நல்ல ரீச் கிடைக்கும் என்று முடிவு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக ‘பெரிய டைரக்டர் என்று சொல்லப்படுகிற ஷங்கர் ‘2.0’ என்கிற  சின்னப் பிள்ளைகள் மட்டுமே பார்க்கக்கூடிய படத்தை எடுத்திருக்கிறார். ஆனால் நான் தயாரித்த படத்தை இயக்கியிருக்கும் சின்னப் பையனோ பெரியவர்கள் பார்க்கவேண்டிய படத்தை எடுத்திருக்கிறார் என்று எகத்தாளம் செய்திருக்கிறார்.