நேற்று வெளியான எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படத்தை பார்த்த பிரபலங்கள் அனைவரும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

ஒரு தென்னிந்திய படத்திற்கு கிடைத்த இப்படி பட்ட வரவேற்பை பார்த்து   பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் 'பாகுபலி 2' திரைப்படம் யானை அல்ல, டைனோசர். அதனால் தான்  நாய், புலி, சிங்கம் போன்ற இயக்குனர் ஓடி ஒளிந்து கொண்டனர். 'பாகுபலி 2' படத்தின் வெற்றியை காண சகிக்காமல் பாலிவுட் திரையுலகினர் தங்கள் காதுகளை மூடிக்கொள்கின்றனர்.

பாலிவுட் பட உலகின் கான்கள், ரோஷன்களை விட ராஜமெளலி பெரியவர். உலகில் உள்ள காலத்தை கிமு, கிபி என்று பிரிக்கப்பட்டது போல இனிமேல் இந்திய சினிமா பாகுபலிக்கு முன் பாகுபலிக்கு பின் என்று பார்க்கப்படப் போகிறது என்று கூறி தன்னுடைய வாழ்த்துக்களை பாகுபலி படக்குழுவினருக்கு தெரிவித்துள்ளார்.