யூடுபில் ட்ரெண்டிங் ஆகிவரும் ‘பேட்ட’ பட ட்ரெயிலர் குறித்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் கமெண்டுகளும் அந்த ட்ரைலர் போலவே வைரல் ஆகிவருகின்றன. 

அப்படி வெளிவரும் கமெண்டுகளில் 90 சதவிகிதம் அவரது இளமையான தோற்றம் குறித்தே இருக்க, எதிரணியைச் சேர்ந்த ஒரு சிலர் அதே ரஜினியின் தோற்றம் குறித்து கிண்டலும் அடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிண்டலடிப்பவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா ‘... [ஒரு கெட்ட வார்த்தை] சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டுமே. இப்படத்தில் 20 வயது குறைந்த இளமையுடனும், 30 சதவிகித அதிக எனர்ஜியுடனும் இருக்கிறார்’ என்று பதிவிட்டிருக்கிறார் வர்மா.