ராம் கோபால் வர்மா இந்த பெயரைக் கேட்டாலே கோலிவுட், டோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை ஆட்டம் காணும்.அப்படிப்பட்ட சர்ச்சை வரலாறுகளுக்கு சொந்தக்காரர். சூர்யாவின் ரத்த சரித்திரம், வீரப்பன், லக்‌ஷிமி என்.டி.ஆர். என அடுத்தடுத்து சர்ச்சை படங்களை இயக்கியவர்.சமீபத்தில் தெலுங்கில் வெளியான அம்மா ராஜ்யம்லோ கடப்பா பிட்டலு படம் ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியது. படங்கள் மட்டுமல்ல, அவரது பேச்சும், டுவிட்டர் பதிவுகளும் கூட சில நேரங்களில் சிக்கலை இழுத்துவரும். மது வாங்க வரிசையில் நின்ற பெண்களின் போட்டோவை பகிர்ந்து கிண்டலடித்தது, இளம் பெண்ணின் முன்னழகை கேவலமாக வர்ணித்தது என இந்த மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து பஞ்சாயத்து கூட்டி வருகிறார். 

இதையும் படிங்க: “இதுக்கு புடவையே கட்டியிருக்க வேண்டாம்”...சாக்‌ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சியை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள்!

தற்போது உயிர்கொல்லி நோயான கொரோனாவிற்கு பயந்து பலரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நிலையில், தனது அடல்ட் படமான கிளைமேக்ஸ் படத்தின் டிரெய்லரை வெளியிட்டு கிளு கிளுப்பு கூட்டினார். பிரபல ஹாலிவுட் நடிகையான மியா மல்கோவா நடிப்பில் ரொமான்ஸ், த்ரில்லர், கிளுகிளுப்பு காட்சிகள் நிறைந்த அந்த படத்தின் டிரெய்லர் சோசியல் மீடியாவில் வைரலானது. டிரெய்லரில் காதல் ஜோடி ஒன்று பாலைவனத்தில் தங்குகின்றனர். அந்த காதல் ஜோடியை பாலைவனத்தில் ஒரு கும்பல் துரத்துகிறது. அதில் இருந்து காதலர்கள் தப்பிக்கிறார்களா? என்பது தான் கதை. காதலர்கள் அங்குள்ள குளத்தில் குளிப்பது, லிப் லாக், நெருக்கமான காட்சிகள் என சகட்டு மேனிக்கு டிரெய்லர் தீயாய் இருந்தது. 

இதையும் படிங்க: சாகும் வரை நடிகை ஸ்ரீதேவி பயந்து நடுங்கிய ஒரே நபர்... ஆனால் தப்பா எதுவும் நடக்கல?

அத்துடன் படத்தை இன்று இந்த ஆன்லைன் தளமான ஸ்ரேயா செட் என்கிற ஆப் மூலமாக ரிலீஸ் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கடவுள் என்ன... கொரோனாவால் கூட “ க்ளைமேக்ஸ்” படம் ஆன்லைனில் ரிலீஸ் ஆவதை தடுக்க முடியாது” என கெத்தாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த படம் இன்று ரிலீஸ் ஆகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. 

இதையும் படிங்க: ஆபாச படம் பார்த்த தமன்னா... ஜாலிக்காக நண்பர் வீட்டில் செய்த கேவலமான வேலை... வைரலாகும் வீடியோ...!

பட ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து ராம் கோபால் வர்மா இவ்வாறு பதிவிட்டுள்ளார், , “பிரேக்கிங் நியூஸ், மியா மல்கோவாவின் க்ளைமேக்ஸ் திரைப்படம் ஜூன் 6ம் தேதி  http://RGVWorld.in/ShreyasET என்ற ஆப்பில் ரிலீஸ்” ஆக உள்ளதாக பதிவிட்டுள்ளார். இந்த அதிர்ச்சி செய்தியுடன் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக “க்ளைமேக்ஸ்” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை நாளை மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ராம் கோபால் சர்மா பகிர்ந்துள்ள http://RGVWorld.in/ShreyasET இந்த லிங்க் மூலமாக நபருக்கு ரூ.100 கட்டணம் செலுத்தி க்ளைமேக்ஸ் படத்தை கண்டு களிக்கலாம் என்பது கூடுதல் தகவல்.