விஜய் சேதுபதி தெலுங்கில் அறிமுகமாகும் ‘ஷை ரா நரசிம்ஹாரெட்டி’ படத்தின் தீ விபத்து என்பது இன்சுரஸ் நிறுவனத்திடமிருந்து பல கோடிகளில் இழப்பீடு பெறுவதற்காக செய்யப்பட்ட செட் அப் வேலை என்று செய்திகள் நடமாடுகின்றன.

தெலுங்கின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அவரது மகன் ராம்சரண் தயாரிக்கும் ‘ஷை ரா நரசிம்ஹாரெட்டி’ படத்தின் ஷூட்டிங் முடிவடையும் நிலையில் உள்ளது. இப்படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ‘நான் ஈ’ சுதீப், நயன்தாரா, தமன்னா உட்பட பெரும் நட்சத்திரப்பட்டாளங்கள் நடிக்கின்றனர்.

சில தினங்களுக்கு இப்படத்திற்காக அமைக்கப்பட்ட செட் முற்றிலும் எரிந்து நாசமானது. தயாரிப்பாளர் தரப்பில் எவ்வளவு பொருட்சேதமானது என்பது தெரிவிக்கப்படவில்லை. அதனால் அந்த விபத்து படப்பிடிப்பு முடிந்த நிலையில் செட் அப் செய்யப்பட்டது என்றது. இன்சுரன்ஸ் நிறுவனத்திடம் பல கோடி கறப்பதற்காக வழக்கமாக சில சினிமா தயாரிப்பாளர்கள் செய்தது போல சிரஞ்சீவி குடும்பத்தினரும் செய்துள்ளனர் என்ற செய்தி காட்டுத்தீ போல பரவியது.

அச்செய்திகளைப் படித்துக்கொந்தளித்த ராம் சரண்,’அது அபாண்டமான குற்றச்சாட்டு. 200 கோடி செலவழித்துப் படம் எடுக்கும் நாங்கள் சில கோடிகளுக்காக அவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொள்ளப்போவதில்லை’ என்று பதிலளித்திருக்கிறார்.