rakul preet sing love with raana

ரகுல் ப்ரீத் சிங்:

தமிழில் 'தடையற தாக்க' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழில் நடித்த, 'புத்தகம்', 'என்னமோ ஏதோ' ஆகிய படங்கள் தொடர் தோல்வியை தழுவியதால் ராசி இல்லாத நடிகை எனக்கூறி ஒதுக்கப்பட்டார்.

தெலுங்கில் கலக்கிய ரகுல்:

பின் தெலுங்கு திரையுலகில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்த ரகுல், தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறினார். இவர் நடித்த பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது. இதனால் திரும்பவும் இவருக்கு கோலிவுட் திரையுலகில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

கோலிவுட் பிரவேசம்;

ரகுல் ப்ரீத் சிங் மிக பெரிய இடைவேளைக்குப் பின் இவருடைய நடிப்பில் தமிழில் வெளிவந்த, 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் மிக பெரிய வெற்றி பெற்றது. மேலும் தற்போது நடிகர் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ள திரைப்படத்திலும், கார்த்திக்கு ஜோடியாக மற்றொரு படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

காதல்:

சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில், ஆந்திராவை சேர்ந்த ஒருவரைத் தான் திருமணம் செய்துக்கொள்வேன் என கூறியிருந்தார். தற்போது நடிகர் ராணாவும், ரகுலும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ராணாவின் பெயர் இப்படி நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது முதல் முறை இல்லை என்றாலும் பலர் இந்த காதல் பிரச்சனை குறித்து ரகுல் ப்ரீத் சிங்கிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரகுல் ப்ரீத் சிங் பதில்:

இந்த காதல் விவகாரம் குறித்து பதில் அளித்துள்ளார் இவர், நானும் ராணாவும் நல்ல நண்பர்கள். என்னுடைய வீட்டின் அருகில் தான் ராணா வசித்து வருகிறார். அதனால் படப்பிடிப்புகள் இல்லாத போது சந்தித்துப் பேசுவோம். இதே போல் எங்களுக்கு ஒரு கேங் உள்ளது. எங்கள் கேங்கில் உள்ள யாருக்கும் திருமணம் ஆகாததால் ஒன்றாக தான் வெளியில் கூட சுற்றுவோம். 

இதனை வைத்து எங்களுக்குள் காதல் என பலர் கூறி வருகின்றனர் என கூறி இந்த காதல் கிசுக்கிசுவை மறுத்துள்ளார்.

தற்போது ரகுல் ப்ரீத் சிங்குடன் காதலில் கிசுகிசுக்கப்படும் ராணா ஒரு காலத்தில் திருஷாவின் காதல் வலையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.