சமீபத்தில் லண்டனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டதாக கூறிய, நடிகை ராக்கி சாவந்த் வயிற்றில் இருப்பது என்னுடைய குழந்தை என கூறி அதிச்சியளித்துள்ளார் அவருடைய முன்னாள் காதலரும், யூடியூப் பிரபலமுமான தீபக் கலால்.

ராக்கி சவாத் பல தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளவர். மேலும் நிறைய டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, பிரபலமானவர். இவர் சில மாதங்களுக்கு முன், யூடியூப் பிரபலமான தீபக் கலால், என்பவரை காதலித்து வருவதாகவும், இருவருக்கும் விரைவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்கும் என கூறினர்.

இந்நிலையில், திடீர் என ராக்கி சாவத், தான் லண்டனை சேர்ந்த தொழிலதிபர் ரித்தீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். தீபக் கலால் பற்றி கேள்வி எழுப்பியதற்கு அவர் தன்னுடைய சகோதரர் போன்றவர் என கூறி அதிர்ச்சிகொடுத்தார்.

தற்போது, ஒருசில படங்களில் தான் கமிட் ஆகியுள்ளதால், படப்பிடிப்பை முடித்த பின், தானும் கணவருடன் லண்டனுக்கு செல்லவிருப்பதாகவும் ராக்கி சாவந்த் கூறி வருகிறார். ஆனால் ராக்கி சாவந்துக்கு இன்னும் திருமணமே  ஆகவில்லை என்றும், அதிக சர்ச்சைகளை விரும்பும் இவர் பரபரப்புக்காகவே  இவ்வாறு கூறுவதாகவும் பாலிவுட் திரையுலகில் சிலர் கூறி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, ராக்கி சாவத்தின் முன்னாள் காதலர் தீபக் கலால் ராக்கி தற்போது இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், அவரின் வயிற்றில் இருப்பது தன்னுடைய குழந்தை என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த தகவலை கேட்டு ஒட்டு மொத்த ரசிகர்களும் அதிர்ச்சியாகியுள்ளனர். எனினும் ராக்கி மற்றும் தீபக் என இருவரும் பல விஷயங்களில் மாறி மாறி பேசி வருவதால், எது உண்மை எது பொய் என்பது தெரியவரும்.