இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம், 'ஜகமே தந்திரம்' இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டாலும் தற்போது உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படம் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில், தனுஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், மற்றும் சந்தோஷ் நாராயணன் மகள் இணைந்து பாடியுள்ள ரகிட ரகிட ரகிட பாடல், தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த பாடலின் வரிகள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாடலான ராம ஆண்டாளு ராமன ஆண்டாளு படத்தின் பாடலை நினைவு படுத்தும் விதமாக இருந்தது.

இந்த படத்தில் கூட தலைவர் ரஜினிக்காத பேட்ட படத்தில் நடித்த முறுக்கு மீசை, வேஷ்டி, சட்டை என அதே கெட்டப்பில் நடித்து நடித்து கலக்கியுள்ளார் தனுஷ்.

இந்நிலையில் இந்த பாடல் தற்போது யூடியூபில் ஒரு கோடி ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.