rajinikath wish the sketch movie team
பொங்கல் ஸ்பெஷலாக இந்த வருடம், நடிகர் சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்', விக்ரமின் 'ஸ்கெட்ச்' மற்றும் பிரபுதேவா நடித்த 'குலோபகாவலி' ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது.
இதில் ஏற்கனவே நடிகர் சூர்யா நடித்த படமான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் மற்ற இரண்டு படங்கள் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வந்தது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 'ஸ்கெட்ச்' படத்தின் சிறப்பு காட்சி திரையிட்டு காண்பிக்கப்பட்டது. தயாரிப்பாளர் தாணுவுடன் இந்த படத்தை பார்த்த ரஜினிகாந்த், படம் முடிந்த பின் படக்குழுவினரை வாழ்தினாராம்.
மேலும் கடைசி 30 நிமிடம் காட்சியில் எதிர்பாராத மெசேஜ் இயக்குனர் கொடுத்திருப்பதாகவும், எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்தெடுத்து உடலை வருத்தி நடித்து வரும் விக்ரம் இந்த படத்தில் அசத்தலான நடிப்பை வெளிபடுதியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவலை இயக்குனர் விஜயசந்தர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்
