Rajinikanths Warning for 100 People
ரஜினியுடன் போட்டோ எடுக்கும் நிகழ்ச்சியில் முறைகேடு நடக்கிறது என்று ரசிகர்கள் செம்ம கடுப்பில் இருக்கின்றனர். இதில், ரஜினிகாந்த் தலையிட்டு பிரச்சனையை தீர்க்காவிட்டால் அவர் வீட்டின் முன்பு 100 பேர் தீக்குளிப்போம் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பின், இன்று ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து தனித்தனியே போட்டோ எடுத்துக் கொள்ள இருக்கிறார். ரஜினியின் அடுத்த படம் வர இருப்பதால், இது ரஜினியின் தந்திரம் என்று சிலர் சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர்.
இன்று முதல் வரும் 19 வரை 5 நாள்களுக்கு சென்னையில் ரசிகர்களை சந்திக்கிறார். ஆனால், அடையாள அட்டையுடன் வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி என பல கண்டிசன்கள் போட்ட பின்பு தான் இந்த சந்திப்புக்கு ரஜினி ஒகே சொல்லி இருக்கிறார். நல்ல வேளை இவரும் ஆதார் அட்டை கேட்கல.
இந்த நிலையில் சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள் மன்றத்தின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் ரஜினியை சந்திப்பதற்காக சேலம் மாவட்டத்தில் வழங்கப்பட்ட கூப்பன்களை 3 ஆயிரம், 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும், இந்த பிரச்சனையை ரஜினி தலையிட்டு சரிசெய்யாவிட்டால் அவர் வீட்டின் முன்பு 100 பேர் தீக்குளிப்போம் என்றும் ரசிகர்கள் எச்சரித்தனர்.
