rajinikanth wishes for k.vishwanath director
பழம்பெரும் தெலுங்கு இயக்குனரும் நடிகருமான கே.விஸ்வநாத்திற்க்கு மத்திய அரசு சமீபத்தில் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை அறிவித்து கௌரவப்படுத்தியது.
மேலும் விருது பெற்ற இயக்குனர் கே.விஸ்வநாத் அவர்களுக்கு அரசியல்வாதிகளும், கோலிவுட், டோலிவுட் திரையுலகை சேர்ந்த பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
குறிப்பாக மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம், கமல்ஹாசன் ஆகியோர் தங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தாதா சாகேப் பால்கே விருது பெறும் இயக்குநர் கே.விஸ்வநாத் அவர்களுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் தனது டுவிட்டரில், 'மரியாதைக்குரிய கே.விஸ்வநாத்தின் சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரதிற்கு நான் தலை வணங்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
கே.விஸ்வநாத் இயக்கத்தில் ரஜினிகாந்த் இதுவரை ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்றாலும், திறமையானவர்களுக்கு எப்போதுமே மதிப்பளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாதா சாகேப் விருது மட்டுமின்றி கே.விஸ்வநாத் அவர்கள் ஏற்கனவே பத்மஸ்ரீ விருது, ஆந்திர அரசின் நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
