சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை (Super star Rajinikanth) வைத்து, 'அண்ணாத்த' (Annaatthea)  படத்தை இயக்கிய இயக்குனர் சிவாவின் (Director Siva) வீட்டிற்க்கே சென்று, தலைவர் இன்ப அதிர்ச்சி கொடுத்தது மட்டும் இன்றி, பரிசு ஒன்றையும் கொடுத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, 'அண்ணாத்த' படத்தை இயக்கிய இயக்குனர் சிவாவின் வீட்டிற்க்கே சென்று, தலைவர் இன்ப அதிர்ச்சி கொடுத்தது மட்டும் இன்றி, பரிசு ஒன்றையும் கொடுத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கியிருந்த இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலை வாரிக்குவித்தது. இந்த படத்தில், அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு மாஸ் இல்லாமல் போனது ரசிகர்களுக்கு கிடைத்த பெரிய ஏமாற்றம் என்றாலும், கண்ணீர் வர வைக்கும் செண்டிமெண்ட் காட்சிகள் இருந்ததாக தலைவரின் வெறித்தனமான ரசிகர்கள் சற்று ஆப்சட்டில் கூறினர்.

அதே நேரம் குடும்ப படத்தை பார்க்க வேண்டும் என திரையரங்கிற்கு செல்லும் ரசிகர்களுக்கு நிறைவான படம் பார்த்த சந்தோஷத்தை கொடுத்ததாகவும் சிலர் தெரிவித்தனர். உலகம் முழுவதும் சுமார் 1200 திரையரங்குகளில் வெளியான 'அண்ணாத்த' திரைப்படம் மீண்டும் ரஜினிகாந்தின் பாக்ஸ் ஆபிஸ் செல்வாக்கை அடிக்கோடிட்டுக் காட்டியது போல் வசூலில் கெத்து காட்டியது.

ரஜினிகாந்த் பல்வேறு பிரச்சனைகளை கடந்து நடித்து முடித்து வெளியான இந்த படம், விமர்சனம் ரீதியாக எதிர்பாத்தார்த்த இடத்தை தக்கவைத்து கொள்ளவில்லை என்றாலும், வசூல் ரீதியாக மீண்டும் தலைவர் படம் என நிரூபித்து விட்டதாக ரசிகர்கள் கூறி வந்தனர். இந்நிலையில், ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்தின் இயக்குனர், சிவா வீட்டிற்கே சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மேலும், 'அண்ணாத்த' திரைப்படம் குடும்ப ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற படமாக எடுத்துள்ளதாலும், வசூல் ரீதியாக வெற்றியை கண்டுள்ளதாலும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தது மட்டும் இன்றி, அவருக்கு தங்க சங்கிலி ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகியள்ளது. மேலும் அடுத்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யார் இயக்கத்தில் நடிப்பார்? என பல கேள்விகள் வலம் வந்துகொண்டிருந்தாலும் தற்போது வரை, இதற்க்கு ரஜினிகாந்த் தரப்பில் இருந்து அதிகார பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.