சில நாட்களுக்கு முன்பு போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பாஜக வை எதிர்த்து எதிர்கட்சிகள் கூட்டம் நடத்தியது குறித்து கரத்து தெரிவித்தார். அப்போது ஒரு கட்சியை 10 பேர் எதிர்க்கிறார்கள் என்றால் அவர்களில் யார் பலசாலி ? என்பது உங்களுக்கே தெரியும் என பாஜகவுக்கு ஆதரவாக பேசினார்.

இந்நிலையில்தான் 5 மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இதையடுத்து வெளியூர் செல்வதற்காக மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது   5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு  பதில் அளித்த ரஜினிகாந்த் , 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதை காட்டுவதாக தெரிவித்தார். இந்த முடிவுகள் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்