அருமை நண்பா என கலங்கிய ரஜினி... மனோபாலா மறைவுக்கு கண்ணீர்மல்க இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்

நடிகர் மனோபாலாவின் மறைவுக்கு ரஜினிகாந்த், இயக்குனர் பாரதிராஜா உள்பட ஏராளமான பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Rajinikanth to Bharathiraja here the list of celebrities mourns for the demise of manobala

நகைச்சுவை நடிகரும், இயக்குனருமான மனோபாலா இன்று காலமானார். 69 வயதாகும் அவர் கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில், வடபழனியில் உள்ள இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. மனோபாலாவின் மறைவு திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள நிலையில், அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும் மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், அருமை நண்பர் மனோபாலாவின் இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது என பதிவிட்டுள்ள ரஜினி, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் தன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... ஆஞ்சியோ செய்த ஒரே வாரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட மனோபாலா! திடீர் மரணத்தால் அதிர்ச்சியில் திரையுலகம்!

அதேபோல் மனோபாலாவின் குருவும், பிரபல இயக்குனருமான பாரதிராஜா பதிவிட்டுள்ள இரங்கல் பதிவில், என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும், எங்கள் தமிழ் திரை உலகிற்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பு என பதிவிட்டுள்ளார். மனோபாலா பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், இயக்குனரும் நடிகருமான மனங்கவர் மனோபாலா அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி என் மனதை வருத்தியது. அவரை இழந்து வாடும் அவர்களின் இல்லதாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகை வரலட்சுமி பதிவிட்டுள்ளதாவது : “ மனோபாலா மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். நல்ல மனிதர்களில் ஒருவர். கடந்த நவம்பரில் தான் அவருடன் பணியாற்றினேன். எப்போது ஜாலியாக இருப்பார். அனைவரையும் சிரிக்க வைப்பார். உண்மையிலேயே அவரது மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. நீங்கள் ஒரு அற்புதமான நபர். எப்போதும் எங்களை சிரிக்க வைத்ததற்கு நன்றி!” என குறிப்பிட்டுள்ளார்.

கமல் பதிவிட்டுள்ளதாவது : “இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சூரி பதிவிட்டுள்ள டுவிட்டில், “திறமையான இயக்குனர், கனிவான தயாரிப்பாளர், அருமையான நடிகர்,  அனைவருக்கும் பிடித்த மிகச்சிறந்த மனிதர் மனோபாலா அவர்கள் இறப்பு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல தமிழ் சமூகத்துக்கும் பேரிழப்பு” என தெரிவித்துள்ளார்.

மனோபாலா மறைவுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இரங்கல் தெரிவித்து போட்டுள்ள பதிவில், “மனமுடைந்துபோனேன், ஆத்மா சாந்தியடையட்டும் மாமா” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். மனோபாலா கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Breaking : பிரபல நடிகரும் இயக்குனருமான மனோபாலா காலமானார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios