Rajinikanth to announce political entrance to fans......

டிசம்பர் 26-ல் நடக்கும் ரசிகர்கள் சந்திப்பில் அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி அறிவிப்பார் என்று அவரது நண்பரும் அரசியல் பிரமுகருமான தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களாக அரசியலுக்கு வர உள்ளதாக தனது ரசிகர்களிடம் கூறிவருகிறார். ஆனால் இதுவரை அவர் அரசியல் பிரவேசம் குறித்த எந்த ஒரு திடமான முடிவையும் அறிவிக்கவில்லை. இதனால் அவரின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடனே காணப்படுகின்றனர்.

இதனையடுத்து, டிசம்பர் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தனது ரசிகர்களை சந்திக்க ரஜினி திட்டமிட்டுள்ளார். அப்போது, அவர் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் ரஜினியை, நண்பரும் அரசியல் பிரமுகருமான தமிழருவி மணியன் நேற்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

அந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழருவி மணியன், "டிசம்பர் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடக்கும் ரசிகர்கள் சந்திப்பில் ரஜினி தனது அடுத்தக் கட்ட திட்டம் பற்றி அறிவிப்பார். அதன்பின், அவரின் அரசியல் பிரவேசம் குறித்து எந்த சந்தேகமும் இருக்காது” என்று கூறியுள்ளார்.