நெல்லையில் ‘தலைவர் 170’ பட ஷூட்டிங்... படப்பிடிப்புக்கு வந்த ரஜினியை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்- வைரலாகும் video

தலைவர் 170 படத்தின் படப்பிடிப்புக்காக நெல்லை வந்த நடிகர் ரஜினிகாந்தை பார்க்க ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

Rajinikanth Thalaivar 170 movie shooting in Nellai fans gathered to see thalaivar gan

ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தலைவர் 170. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. அங்குள்ள கல்லூரியில் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இதையடுத்து நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தின் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாபச்சன், பகத் பாஸில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், விஜய் டிவி ரக்‌ஷன் ஆகியோர்  முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்நிலையில் நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள ஆர்.எம்.எஸ் என்கிற ஓடு தயாரிக்கும் தொழிற்சாலையில் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் பட ஷூட்டிங் நடைபெறுவதையொட்டி ஓடு தொழிற்சாலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

முன்னதாக ஷூட்டிங்கில் கலந்துகொள்வதற்காக வந்த நடிகர் ரஜினிகாந்த்தை பார்க்க அப்பகுதியில் ரசிகர்கள் குவிந்திருந்தனர். ரஜினியின் கார் வந்ததும் அவரை பார்க்க ரசிகர்கள் கூடினர். அவர்களைப் பார்த்து கை அசைத்து விட்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றார் ரஜினிகாந்த். இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸின் ‘பாகுபலி’யாக வலம் வரும் இயக்குனர் ராஜமவுலியின் சொத்து மதிப்பு இவ்வளவு தானா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios