பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், மருமகன் தனுஷை வைத்து ஜகமே தந்திரம் பட ஷூட்டிங்கை முடித்துவிட்டார். 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி தொடங்கப்பட்டது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் டிசம்பர் 13-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஒரு வாரத்திற்கும் மேலாக ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த ஷூட்டிங்கை மீண்டும் ஐதராபாத்தில் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இனி அரசியல் வேண்டாம் என முடிவெடுத்துள்ள ரஜினிகாந்த் சினிமாவில் தீவிர கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளாரம். இந்நிலையில் தலைவர் 169 படம் குறித்த தகவல்களும் சோசியல் மீடியாவில் பரவி வருகின்றன. 

பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், மருமகன் தனுஷை வைத்து ஜகமே தந்திரம் பட ஷூட்டிங்கை முடித்துவிட்டார். இந்த படம் ஓடிடியில் வெளியாகுமா? தியேட்டரிலா? என்ற பிரச்சனை உச்சத்தில் உள்ளது. இந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது விக்ரம் மற்றும் துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க போகிறார். விக்ரமுடனான படத்தை நிறைவு செய்த பிறகு தலைவர் 169 வேலைகளை கார்த்திக் சுப்புராஜ் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.