இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் 'தர்பார்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்தது. 

இதில், இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசிய ரஜினிகாந்த், தான் தமிழகத்தில் காலடி எடுத்து வைத்த, கதையை முதல் முறையாக மிகவும் சுவாரஸ்யமாக கூறினார். 

’பெங்களூரில் பிறந்து வளர்ந்த ரஜினிகாந்த்,  எஸ்எஸ்எல்சி படிக்கும் போதில் இருந்ததே, படிக்க விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். எதாவது வேலைக்கு போக முயற்சி செய்த போது அதனை அவரின் சகோதரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

 

மாறாக ரஜினிகாந்த் நன்றாக படிக்க வேண்டும் என்று, பெரிய கல்லூரி ஒன்றில் சேர்த்து விட்டார். ஒரு நாள் எக்ஸாம் பீஸ் கட்ட கொடுத்த பணத்தை எடுத்து கொண்டு, பாஸ் ஆகாமல் பெயில் ஆகிவிடுவோம் என்கிற பயத்தில்,  தமிழ்நாட்டுக்கு வர ரயில் ஏறியுள்ளார் ரஜினிகாந்த்.

அவர் ஏறிய ரயிலில் திடீர் என செக்கிங் வந்த டிக்கெட் செக்கர், ரஜினிகாந்திடம் டிக்கெட் கேட்டுள்ளார். ரயிலில் தூங்கிக் கொண்டே வந்ததால் டிக்கெட், எங்கு போனது என தெரியவில்லை. எனவே அபராதம் கட்ட சொல்லியுள்ளார்.  ஆனால் ரஜினிகாந்த் தான் டிக்கெட் எடுத்தேன் என்பதை அழாத குறையாக நிரூபிக்க முயற்சி செய்துள்ளார்.

பின்னர் ரயில் நிலையத்தில், கூலிக்கு சுமைதூக்குபவர்கள் ரஜினிகாந்திற்காக பரிந்து பேசி, தங்களிடம் இருந்த பணத்தை டிக்கெட் செக்கரிடம் கொடுக்க முன்வந்துள்ளனர். பின் தன்னுடைய பாக்கெட்டில் வைத்திருந்த மீதி பணத்தை எடுத்து காட்டியுள்ளார் தலைவர்.

அதன் பின் தான் ஒருவழியாக ரஜினிகாந்த் சொன்னதை உண்மை என நம்பி, டிக்கெட் செக்கர் அவரை தமிழகத்தில் கால் அடி எடுத்து வைக்க சம்மதித்ததாக கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார்.