நீண்ட இடைவெளிக்குப் பின் சினிமாவுக்குள் அதிரிபுதிரியாக நுழைந்திருக்கும் வடிவேலுவுடன், அவரது பழைய நகைச்சுவை கூட்டாளிகள் பலர் இல்லை. எனவெ..

  • ஆல்ரெடி உச்சபட்ச சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார் நயன் தாரா. ஆனால் என்ன நினைத்தாரோ தெரியலை, திடுதிப்புன்னு இன்னும் சில ‘சி’க்கள் ஏற்றிவிட்டார். இதனால் அவரது புதிய பட தயாரிப்பாளர்கள் கடுப்பாகிவிட்டனர். கேட்டால், ‘மேடம் இருந்தால் படத்தோட வசூலே தனி லெவல்’ என்று அவரது பி.ஆர்.ஓ.விடமிருந்து பதில் வருகிறதாம். அதற்கு ‘அப்படிங்ளா, ஐரா! நெற்றிக்கண், டோரா வசூலெல்லாம் ஏன் படுத்துடுச்சு? அவ்வளவு ஏன் அண்ணாத்த என்னாச்சு?’ என்று எதிர்கேள்வி கேட்டனராம் தயாரிப்பாளர்கள். ஆனாலும் நோ ரெஸ்பான்ஸ்.

(இத்தனைக்கும் ஐராவுல டபுள் நயன்! அப்ப டபுள் வசூலாகியிருக்கணுமே)

  • நீண்ட இடைவெளிக்குப் பின் சினிமாவுக்குள் அதிரிபுதிரியாக நுழைந்திருக்கும் வடிவேலுவுடன் அவரது பழைய நகைச்சுவை கூட்டாளிகளில் முக்கியமானவர்கள் பலர் இல்லை. அந்த வெற்றிடத்தை புதிய நபர்களை கொண்டு நிரப்பியுள்ளார். அதில் குக் வித் கோமாளிகள் எண்ணிக்கை அதிகமாம்.

(பார்த்துங்க வடிவேலு, பழக்க தோஷத்துல கருக வெச்சுட போறாங்க)

  • இதுவும் வடிவேலு செய்திதான். ரஜினிகாந்தின் புதிய படம் ஓ.கே.வாகிவிட்டது, தன் மகளின் திருமண உறவு பிரச்னையை மறக்க மளமளவென புது படத்தில் ரஜினி கமிட் ஆகிறார் என்று ஏஸியா நெட் தமிழ்தான் முதன் முதலில் எழுதியது. இந்நிலையில் இப்படத்தில் வடிவேலுவை இணைத்துவிட தயாரிப்பு தரப்பு பெரிய முயற்சி எடுத்து வருகிறது. வடிவேலுக்கு டபுள் ஓ.கே. ஆனால் ரஜினிதான் இன்னமும் முக்கிய முடிவு சொல்லாமல் இருக்கிறாராம். ஏனென்றால் ரஜினியை சீண்டிய வடிவேலுவின் வார்த்தை அப்படி. ஆனால் தயாரிப்பு தரப்போ சமீப காலங்களில் ரஜினியின் படங்களில் காமெடி பேசப்படாததை சுட்டிக் காட்டியுள்ளனர்.

(ஏன்டா அப்ப ரஜினிய காப்பாத்த வடிவேலுவா ? என்ன கொடுமைடா இது)

  • வலிமை ரிலீஸுக்கு முன்னோ, பின்னோ அஜித் குமாரின் அடுத்த பட அறிவிப்பு வரும். அநேகமாக அதில் டபுள் ரோல், அதில் ஒரு ரோல் வில்லத்தனமாக இருக்கலாம்! என்கிறார்கள். அஜித் நெகடீவ் கதாபாத்திரங்களில் நடித்த வாலி, மங்காத்தா ஆகியவை சூப்பர் டூப்பர் ஹிட்டான சென்டிமெண்டாம்.

(பேசாம வாலி -2 வோ, மங்காத்தா -2 வோ கூட ட்ரை பண்ணலாமே பாஸு)