Thalaivar 169 : ரஜினி படத்துக்கு நெல்சன் தேர்ந்தெடுத்த மாஸான தலைப்பு... சின்னதா இருந்தாலும் சூப்பரா இருக்கே!
Thalaivar 169 : தலைவர் 169 படத்திற்கு இயக்குனர் நெல்சன் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த. சிவா இயக்கிய இப்படம் தங்கச்சி செண்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்ததோடு மட்டுமின்றி தோல்விப் படமாகவும் அமைந்தது.
அண்ணாத்த படம் ஓடாததால், அடுத்த படத்திற்கான கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தார் ரஜினி. அவருக்கு கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி, பாண்டிராஜ், பால்கி, கே.எஸ்.ரவிக்குமார் போன்ற இயக்குனர்கள் கதை சொல்லினர். ஆனால் எதுவுமே அவருக்கு திருப்தி அளிக்காமல் இருந்த சமயத்தில், மாஸான கதையுடன் எண்ட்ரி கொடுத்துள்ளார் நெல்சன்.
முதலில் ரஜினிக்கு கதை சொல்ல பயந்துள்ளார் நெல்சன். இதையடுத்து பீஸ்ட் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் அவரை ஊக்கப்படுத்தி தைரியமாக கதை சொல்லுமாறு அனுப்பி வைத்துள்ளார். விஜய் தந்த தெம்புடன் சென்று ரஜினியிடன் நெல்சன் கதை சொல்ல, கேட்டதும் ஓகே பண்ணி விட்டாராம் சூப்பர்ஸ்டார்.
அண்மையில் இவர் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்திற்கு இயக்குனர் நெல்சன் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், அது என்ன தலைப்பு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 5 பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், இதில் பாஸ் என்கிற பெயர் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் எனக் கருதும் நெல்சன் அதை தேர்ந்தெடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... BB Ultimate :ரூ.15 லட்சம் பணத்துடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஹாப்பியாக வெளியேறிய போட்டியாளர்.. யார் தெரியுமா?