BB Ultimate :ரூ.15 லட்சம் பணத்துடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஹாப்பியாக வெளியேறிய போட்டியாளர்.. யார் தெரியுமா?

BB Ultimate : தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் அல்டிமேட் ஷோவும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. தற்போது போட்டியாளர்களிடையே ஆசையை தூண்டும் விதமாக மணி டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது.

female contestant who is walk out from biggboss ultimate with rs 15 lakhs

பிக்பாஸ் நிகழ்ச்சி இறூதிக்கட்டத்தை நெருங்கும் போது மணி டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம். அதன்படி, பிக்பாஸ் வீட்டுக்குள் பணப் பெட்டி ஒன்று அனுப்பப்படும், அதில் வைக்கப்பட்டுள்ள தொகையை எடுக்க விரும்பும் போட்டியாளர், அந்த பெட்டியுடன் உடனடியாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார். அதில் உள்ள பணத்தின் மதிப்பு படிப்படியாக உயர்த்தப்படும்.

அந்த வகையில் இதுவரை நடந்து முடிந்த 5 சீசனில் இதுவரை 3 பேர் மட்டுமே அந்த பணப்பெட்டி உடன் வெளியேறி உள்ளனர். மூன்றாவது சீசனில் கவின் ரூ.5 லட்சம் தொகையுடன் பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேறினார். அதேபோல் நான்காவது சீசனில் கேப்ரியல்லாவும் ரூ.5 லட்சம் அடங்கிய பணப்பெட்டியுடன் வெளியேறினார்.

female contestant who is walk out from biggboss ultimate with rs 15 lakhs

5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட சிபி, ரூ.12 லட்சம் அடங்கிய பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் அல்டிமேட் ஷோவும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. தற்போது போட்டியாளர்களிடையே ஆசையை தூண்டும் விதமாக மணி டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது.

female contestant who is walk out from biggboss ultimate with rs 15 lakhs

ஆரம்பத்தில் ரூ.3 லட்சம் தொகையுடன் பணப்பெட்டி அனுப்பப்பட்டது. இதையடுத்து படிப்படியாக தொகை அதிகரிக்கப்பட்டதில், இறுதியாக ரூ.15 லட்சம் தொகையுடன் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து சுருதி வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் பெட்டியை எடுக்க சுருதிக்கும் ஜூலிக்கும் இடையே கடும் போட்டி நிலவியதாக கூறப்படுகிறது. அதில் வென்ற பிறகு தான் சுருதி அந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... Actress Losliya : கும்பலா சேர்ந்து ‘அந்த’ மாதிரி படம் பார்த்தேன்.... நடிகை லாஸ்லியா ஓபன் டாக்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios