Ilaiyaraaja's First Symphony Valiant at Eventim Apollo London : ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள் இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது என்று குறிப்பிட்டு இளையராஜாவிற்கு வாழத்து தெரிவித்துள்ளார்.

Ilaiyaraaja's First Symphony Valiant at Eventim Apollo London : இசைஞானி இளையராஜா இன்று லண்டனில் உள்ள அப்போலோ அரங்கில் தனது முதல் சிம்பொனி வேலியண்ட் படைக்க இருக்கிறார். இதற்காக ஒட்டு மொத்த உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் இளையராஜா நள்ளிரவு 12.30 மணிக்கு முதல் சிம்பொனியை படைக்கிறார். இதற்காக சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருந்தார். இதே போன்று சிவகார்த்திகேயனும் தன் பங்கிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

Ranya Rao gold smuggling case: தங்க கடத்தலில் ஈடுபட்ட நடிகை ரன்யா ராவ் வழக்கில் சிபிஐ விசாரணையை தொடங்கியது!

இந்த நிலையில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தன் பங்கிற்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள் என்று குறிப்பிடுள்ளார்.

சிம்பொனி என்றால் என்ன?

ஆர்கெஸ்ட்ராவுக்கான பெரிய அளவிலான அல்லது நீட்டிக்கப்பட்ட இசை அமைப்பு. வெஸ்டர்ன் கிளாசிகல் மியூசிக். சிம்பொனி என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் சொல்லப்படுகிறது. இது குரல் அல்லது கருவி கொண்டு இசைக்கப்படும் இசை நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

வாலி எழுதிய பாடல் ரிஜெக்ட்; வேறு ஒருவரை எழுத வைத்து சூப்பர் ஹிட்டான பாடல்!

அன்னக்கிளி படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா இன்று 1500க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். 1976 ஆம் ஆண்டு முதல் இன்று வரையில் சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை எட்டியுள்ளார். சினிமாவில் நடிகர், நடிகைகள் பல சாதனைகள் படைத்து வரும் நிலையில் இசையில் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியவர் இளையராஜா. இன்று தனது முதல் சிம்பொனி வேலியண்ட் (Ilaiyaraaja's First Symphony Valiant at Eventim Apollo London) இசையை லண்டனில் அரங்கேற்ற இருக்கிறார். சிம்பொனி இசையை 34 நாட்களில் உருவாக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamannaah Breakup: விஜய் வர்மா இப்படி செய்தாரா? தமன்னா பிரேக்கப்புக்கு என்ன காரணம் - தீயாய் பரவும் தகவல்!