வாலி எழுதிய பாடல் ரிஜெக்ட்; வேறு ஒருவரை எழுத வைத்து சூப்பர் ஹிட்டான பாடல்!
வாலி எழுதிய பாடல் நன்றாக இல்லை என ரிஜெக்ட் செய்த இயக்குனர், பின்னர் வேறு ஒருவரை எழுத வைத்து அந்த பாடலை ஹிட் கொடுத்தார். இதுபற்றிய விவரம் இதோ...

டி எஸ் ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் வாலி திருச்சி ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்தவர். 15,000க்கும் அதிகமான பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார். 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல் எழுதி கொடுத்திருக்கிறார். பொதுவாக மற்ற கவிஞர்களை விட வாலி எழுதிய பாடல்கள் தான் எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால், இங்கு சற்று வித்தியாசமாக வாலி எழுதிய வரிகள் பிடிக்கவில்லை என்று இயக்குநரும், இசையமைப்பாளரும் சொல்லிருக்கிறார்.
'எங்க ஊரு ராசாத்தி':
கடந்த 1980 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் 'எங்க ஊரு ராசாத்தி'. இயக்குநர் என் எஸ் ராஜேந்திரன் இயக்கத்தில் ராதிகா, சுதாகர் ஆகியோர் பலர் நடித்து வெளியான படம். இந்தப் படத்திற்கு கங்கை அமரன் தான் இசையமைத்திருந்தார். ராதிகா மற்றும் சுதாகர் இருவரும் காதலிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் சுதாகர் வெளியூர் செல்ல நேரிடுகிறது. அப்போது ராதிகாவிற்கு வேறொருவருடன் திருமணம் நடந்து முடிந்துவிடுகிறது. சுதாகர் மீண்டும் ஊர் திரும்பிய போது ராதிகாவிற்கு திருமணம் நடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இதுதான் பாடலுக்கான சிச்சூவேஷன். அந்த நேரத்தில் தனது காதலி ராதிகாவை நினைத்து காதலன் சுதாகர் பாடல் பாட வேண்டும்.
பரோட்டா சாப்பிடும் கேப்பில் வாலி எழுதிய சூப்பர் ஹிட் பாடல் பற்றி தெரியுமா?
சுச்சுவேஷனுக்கு வாலியின் பாடல் பொருந்தவில்லை
இந்த சுச்சுவேஷனுக்கு முதலில் பாடல் வரிகள் எழுதியது கவிஞர் வாலி தான். இந்தப் படத்திற்கு வாலி ஆசைப்பட்டு பார்த்த ஒரு அழகான பொண்ணு மற்றும் சிறுக்கி ஒருத்தி சிங்கார என்று 2 பாடல்களுக்கு பாடல் வரிகள் எழுதி கொடுத்தார். இதில் ஆசைப்பட்டு பார்த்த என்ற பாடலை எஸ் ஜானகி பாடியிருப்பார். சிறுக்கி ஒருத்தி என்ற பாடலை மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ் பி சைலஜா இருவரும் இணைந்து பாடியிருப்பார்கள். 3ஆவதாகவும் ஒரு பாடல் எழுதியிருந்தார்.
வாலி எழுதிய பாடலை நிராகரித்த இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர்
ஆனால் அந்த பாடல் கதாசிரியர் கலைமணிக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக கலைமணி உடனடியாக முத்துலிங்கத்தை அழைத்து எனக்கு இந்த பாடல் பிடிக்கவில்லை. இது தான் டியூன். இதற்கு ஏற்றவாறு நீங்கள் ஒரு பாடல் எழுதி தாருங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு முத்துலிங்கமோ, பாடல் பிடிக்கவில்லை என்று வாலியிடம் சொல்லியிருக்கலாம் அல்லவா என்று கூறியிருக்கிறார். அதற்கு கலைமணி நீங்கள் கொடுக்கும் காசுக்கு இது போதும் என்று சொல்லிவிடுவார் என்றும், அதனால் தான் அவரிடம் சொல்லவில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும், அதற்காகவே உங்களை எழுத சொன்னோம். அதோடு நீங்கள் எழுதும் பாடல் நன்றாக இருந்தால் உங்களது பாடலை படத்தில் வைத்துக் கொள்வோம், இல்லையென்றால் வாலி எழுதி கொடுத்த பாடலையே வைத்துக் கொள்வோம் என்று கூறியிருக்கிறார்.
எம்ஜிஆர், நம்பியாருக்காக பீவரிலும் கூட பாட்டு எழுதிய வாலி – அழகு ஒரு ராகம் சூப்பர் ஹிட் பாடலா?
முத்துராமலிங்கம் எழுதிய பாடல்
தனது பாடலை வைக்க வேண்டும் என்று நினைத்து முத்துலிங்கம் எழுதி கொடுத்த பாடல் தான் "பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன்" என்ற பாடல். இது வாலி எழுதிய பாடலை விட அருமையாக இருந்ததால், இந்த பாடலே திரைப்படத்தில் இடம்பெற்றது. வாலி எழுதி பிடிக்கவில்லை என்று தன்னை எழுத சொன்ன சம்பவம் பற்றி முத்துலிங்கம் தான் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.