Asianet News TamilAsianet News Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மிக உயரிய தாதாசாகேப் பால்கே விருது..! மத்திய அமைச்சர் அறிவிப்பு!

இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான தாதாசாகேப் பால்கே விருது இந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டு உள்ளது.

rajinikanth selected for dada sahab phalke award
Author
Chennai, First Published Apr 1, 2021, 10:44 AM IST

இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான தாதாசாகேப் பால்கே விருது இந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு முதல் திரைத்துறை கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. 

இந்த விருதை முதல் முதலாக பெற்றவர் என்கிற பெருமை, நடிகை தேவிகா ராணினிக்கு கிடைத்தது. பின்னர் லதா மங்கேஸ்கர், சிவாஜி கணேசன், இயக்குனர் பாலச்சந்தர் உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு, பிரபல பாலிவுட் நடிகர் அமிதா பச்சனுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்ட நிலையில், இந்த வருடத்திற்கான விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

rajinikanth selected for dada sahab phalke award

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்கராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இந்த உயரிய விருது கிடைத்தது, அவரது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகின் எந்த ஒரு பின்புலப்பும் இல்லாமல்... பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார் ரஜினிகாந்த். 1973 ஆம் ஆண்டில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நடிப்பிற்கான பட்டயம் பெற்றார். இவரின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். இதனை கைலாசம் பாலசந்தர் இயக்கினார். இந்தப் படம் உட்பட இவரின் தொடக்ககாலத்தில் வில்லன் கதாப்பத்திரங்களில் நடித்தார். பின்னர் ஹீரோவாக நடிக்க துவங்கி ரசிகர்கள் மனதில் சூப்பர் ஸ்டாராக நிலைத்து நின்றார். 

rajinikanth selected for dada sahab phalke award

இவரைத் தலைவர் என்றும் ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள். அரசியல் வாழ்வில் ஈடுபட உள்ளதாக அறிவித்த இவர், தன்னுடைய உடல்நல பிரச்சனைகள் காரணமாக பின்னர் அரசியலில் இருந்தே முழுமையாக விலகுவதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... தல அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள கோபுரம் ஸ்டுடியோவில் செட் அமைக்கப்பட்டு முழு வீச்சில் எடுக்கப்பட்டு வருகிறது.

rajinikanth selected for dada sahab phalke award

நடிகை குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ள பல பிரபலங்கள் இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படம் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் 51வது தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு  வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.  மேலும் தமிழக தேர்தலுக்கும் ரஜினியின் விருதுக்கும் தொடர்பில்லை என ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார். அறிவித்த நிலையில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்கள்.  

Follow Us:
Download App:
  • android
  • ios