கடந்த 42 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆனால் அவரது கடைசியாக நடித்த லிங்கா,கபாலி,காலா போன்ற படங்க அவ்வளவாக வெற்றி பெறவில்லை. இவ்வளவு ஏன் 500 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட 2.0 படம், முதல் பாகமான எந்திரன் அளவிற்கு கூட பிரபலமாகவில்லை படம் விமர்சன ரீதியாக பலத்த அடி. 

இப்படியான பல விமர்சனங்கள் ரஜினியின்  மீது வைக்கின்றனர் சினிமா விமர்சகர்கள். இதை தான் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் சமீபத்திய தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் பேட்ட விஸ்வாசம் படைத்தன வசூல் நிலவரம் குறித்து நடத்திய விவாதத்தில் பங்கேற்ற தயாரிப்பாளர் கே.ராஜன், ரசிகர்களின் விருப்பம் மாறிவிட்டது. இதனால் ரஜினி சார் சினிமாவில் இருந்து விலகினார் என்றால் ரொம்ப பெரிய மரியாதையாக இருப்பார். அரசியல் பயணம் அறிவித்த கமல் இந்தியன் 2 படம் தன் கடைசிப்படம் என விலகுவது குறித்து அறிவித்துவிட்டார். அதைப்போல் ரஜினியும் விலகினால் மரியாதையாக இருப்பார் என கூறினார்.