சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தன்னுடைய 73-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அறிக்கை வெளியிட்டு, ரசிகர்கள் பிரமுகர்கள், ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார். 

கோலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், நேற்று தன்னுடைய 73-ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு லட்சக்கணமான ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தது மட்டும் இன்றி, பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், விளையாட்டு வீரர்கள், திரை பிரபலங்கள் என பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும்... அறிக்கை வெளியிட்டு தன்னுடைய நன்றிகளை ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அந்த வகையில் ரஜினிகாந்த் இரண்டு அறிக்கை வெளியிட்டு தன்னுடைய நன்றிகளை கோரியுள்ளார். முதல் அறிக்கையில்... " எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த,மதிப்பிற்குரிய ஆளுநர் திரு ரவி அவர்களுக்கும், இனிய நண்பர் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

Scroll to load tweet…

இதைத்தொடர்ந்து வெளியிட்ட, மற்றொரு அறிக்கையில் "எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த மதிப்புக்குரிய திரு எடப்பாடி பழனிச்சாமி, திரு ஓ பன்னீர்செல்வம், திரு அண்ணாமலை, திரு சந்திரபாபு நாயுடு, மற்றும் என்னை வாழ்த்திய என்னுடைய அனைத்து மத்திய மாநில அரசியல் நண்பர்களுக்கும், நண்பர் திரு கமலஹாசன், திரு இளையராஜா, திரு வைரமுத்து, திரு எஸ் பி முத்துராமன், திரு ஷாருக்கான், மற்றும் கலையுலகத்தைச் சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும், திரு சச்சின் டெண்டுல்கர், திரு சுரேஷ் ரெய்னா, திரு ஹர்பஜன்சிங் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், அனைத்து துறை சார்ந்த என்னுடைய நலன் விரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும், உலகெங்கும் இருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும், உழைப்பு: "பொழுதைப் போக்கும்! வறுமையை நீக்கும்!! உடலினை காக்கும்" என்கிற தத்துவதை கூறி "உழைத்திடுவோம் மகிழ்ந்திடுவோம்" என கூறியுள்ளார். இந்த அறிக்கையை ரஜினியின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறார்கள்.

Scroll to load tweet…