Asianet News TamilAsianet News Tamil

ராகவேந்திரா மண்டபத்தை கொரோனா வார்டாக பயன்படுத்தலாம்... முந்திக்கொண்ட லதா ரஜினிகாந்த்...!

இந்நிலையில் எப்போதோ மண்டபத்தை மாநகராட்சிக்கு கொடுக்க தயாராக உள்ளதாகவும், பராமரிப்பு பணி நடைபெறுவதாக தவறான தகவல்கள் பரவி வருவதாகவும் ரஜினிகாந்த் தரப்பில் கூறப்பட்டது.

Rajinikanth Ready to Give Raghavendra mandapam For Corona Virus Treatment
Author
Chennai, First Published May 4, 2020, 4:27 PM IST

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,023ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,379 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தவரின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை சென்னையில் 1,458 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து 100ஆக இருந்து வருகிறது.  

Rajinikanth Ready to Give Raghavendra mandapam For Corona Virus Treatment

இதையும் படிங்க: “டாப் ஆங்கிளில் மொத்தமும் தெரியுது”... பிரபல நடிகையின் கவர்ச்சி உடையை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக 750 திருமண மண்டபங்களை மாநகராட்சி தனது கட்டுப்பாட்டில் எடுத்து முகாம்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் தனியா ர் பள்ளி, கல்லூரிகளிலும் 50 ஆயிரம் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சென்னை ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, ஓமந்தூரர் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டாலும், அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது. 

Rajinikanth Ready to Give Raghavendra mandapam For Corona Virus Treatment

இதையும் படிங்க: த்ரிஷாவும் நயன்தாராவும் இவ்வளவு நெருங்கிய தோழிகளா?... பார்ட்டியில் அடிக்கும் லூட்டியை நீங்களே பாருங்கள்...!

ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இதையடுத்து மண்டபத்தை பயன்படுத்திக் கொள்ள மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய போது, பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மண்டபத்தை 3 மாதத்திற்கு பயன்படுத்த முடியாது என்று லதா ரஜினிகாந்த் கூறியதாக இணையத்தில் தகவல்கள் பரவியது. 

Rajinikanth Ready to Give Raghavendra mandapam For Corona Virus Treatment

இதையும் படிங்க: கணவருடன் ஓவர் நெருக்கம்... சாய் பல்லவி நடிப்பை பார்த்து பொறாமைப்பட்ட சமந்தா?

இந்நிலையில் எப்போதோ மண்டபத்தை மாநகராட்சிக்கு கொடுக்க தயாராக உள்ளதாகவும், பராமரிப்பு பணி நடைபெறுவதாக தவறான தகவல்கள் பரவி வருவதாகவும் ரஜினிகாந்த் தரப்பில் கூறப்பட்டது. ரஜினி எப்போதும் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும், இந்த மாதிரி தேவையற்ற வதந்திகளை சிலர் பரப்புவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios