rajinikanth pressmeet in airport
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இருந்து மும்பை கிளம்பிய நடிகர் ரஜினிகாந்த், அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பரபரப்பான சூழலில் சங்கர் இயக்கத்தில் 2.0 படத்தையடுத்து பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி.
இப்படத்திற்கு காலா கரிகாலன் என பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த காலா படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பை புறப்படும் முன்பு நடிகர் ரஜினிகாந்த் , சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிப்பது என் பணி…இதை நான் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து நிருபர்கள் அரசியல் தொடர்பான கேள்விகளை முன்வைத்தபோது அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இதனால் நாளையும் ரஜினி தொடர்புடைய புகைப்படங்களும் செய்திகளும் வெளிவரும் என ரசிகர்கள ஆவலுடன் உள்ளனர்.
