பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். தன்னை மருத்துவர்கள் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள கூறியதாகவும், ஆனால் குடும்பத்தினர் நலன் கருதி மருத்துவமனைக்கு வந்ததாகவும் கூறினார். தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும்,  மருத்துவர்கள் தன்னை ஓய்வில் இருக்க சொல்லியுள்ளதால் யாரும் எனக்கு போன் செய்ய வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். 

மேலும் செய்திகள்: நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸின் பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா? வாங்க பார்க்கலாம்..!
 

கடந்த 14ம் தேதி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து கடந்த 5ம் தேதியில் இருந்து எம்.ஜி.எம். மருத்துவமனையில் இருக்கிறார்.  அவரின் உடல்நலம் திடீர் என்று மோசமடைந்தது. மருத்துவ நிபுணர்களின் அறிவுரையின்படி அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது” என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. கொரோனாவுடன் தீவிரமாக போராடி வரும் எஸ்.பி.பி. நல்ல படியாக வீடு திரும்ப வேண்டுமென இளையராஜா, சிரஞ்சீவி, ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், ராதிகா, தனுஷ், அனிருத், சின்மயி, பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.  

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  அவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இடையில் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து சோசியல் மீடியாவில் வதந்தி பரவியது. அப்போது அப்பாவின் உடல் நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் எனக்கூறிய எஸ்.பி.பி. சரண், அவருடைய உடல்நிலை குறித்து நாங்களே தகவல் கொடுக்கிறோம் எனக்கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்: நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்க இருந்தது இவரா? சூப்பர் வாய்ப்பை மிஸ் செய்த நடிகர்!
 

இந்நிலையில், பல படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ள, பிரபல பாடகரும், சூப்பர் ஸ்டாரின் நண்பருமான எஸ்.பி.பி உடல்நிலை குணமடைய வேண்டும் என வீடியோ ஒன்றை வெளியிட்டு உருக்கமாக பேசியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது "50  ஆண்டுகளுக்கு மேல், இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலால் பாடி, கோடி கோடி ரசிகர்களை மகிழ்வித்த, மதிப்பிற்குரிய எஸ்.பி.பி.அவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அபாயகட்டத்தை தாண்டிவிட்டார் என கேள்வி பட்டதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி. இன்னும் தீவிர சிகிச்சையில் இருக்கும் எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.