தமிழ் சினிமா விநியோகத்தில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளது ஆரா சினிமாஸ், அந்நிறுவனத்தின் மகேஷ் கோவிந்தராஜ் தயார்த்துள்ள திரைப்படம் “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா”. ராஜதந்திரம் பட புகழ் வீரா, பசுபதி, குக்கூ பட புகழ் மாளவிகா நாயகர், ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவு பெற்றது. ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்ய, மேட்லி ப்ளூஸ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். 

சரத்குமார் நடித்த சூரியன் படத்தில் கவுண்டமனி பேசிய பேமஸ் வசனம் ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’என்பது, அதை தலைப்பாக வைத்த போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க ஆரம்பித்தது. புதுமுக இயக்குநரின் இந்த படம் சமகால அரசியல் சூழலை நையாண்டியுடன் விமர்சிக்கும் காமெடி படமாகும். 

இதையும் படிங்க: தம்பியுடன் பிகினியில் படு ஆபாசமாக போஸ்... தலையில் அடித்துக் கொள்ள வைக்கும் பிரபல நடிகை..!

நீண்ட நாட்களாக இந்தா வரும்... அந்தா வரும்.... என இழுத்தடிக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று தான் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டாரும் கட்சி என்னுடையது தான், ஆனால் முதலமைச்சர் நானில்லை என தெளிவாக குழப்பிவிட்டு போய்விட்டார். இதை அப்படியே கேட்ச் செய்த “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” படக்குழுவும் அதை வைத்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

இதையும் படிங்க: டவலை மட்டும் கட்டிக்கொண்டு கவர்ச்சி போஸ்... எல்லை மீறும் யாஷிகா ஆனந்த்...!

அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ரோபோ சங்கரின் கேரக்டர் போஸ்டர் வெளியாகியுள்ளது. ரஜினி மீதான முதல் விமர்சனமே இதோ வர்றேன், அதோ வர்றேன் என அரசியல் களம் காண்பது குறித்து இழுத்தடிக்கப்பட்டது தான், அதை நகைச்சுவை செய்யும் விதமாக அதில், வருவது உறுதி, வந்துட்டே இருக்கேன், வந்துட்டேன் ஆனால் நானில்ல என்ற வாசம் இடம் பெற்றுள்ளது. அரசியல் நையாண்டி படம் என்றால் இதெல்லாம் சாதாரணமப்பா என்று ரசிகர்களும் அந்த போஸ்டருக்கு லைக்குகளை அள்ளித்தருகின்றனர்.