ரஜினிகாந்த் இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஆன்மீக அரசியல் அறிவிப்பு, பிரமாண்ட படமான '2.0' வெற்றி, 'பேட்ட'  எதிர்பார்ப்பு என இந்த ஆண்டு முழுவதுமே ட்ரெண்டிங்கில் இருந்த ரஜினிகாந்த் பிறந்த நாள்  ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'பேட்ட' படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ளது.  கடந்த ஞாயிற்றுக் கிழமை, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், இன்று பகல் 11 மணியளவில்,  'பேட்ட'  படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

அறிவித்ததைப்போலவே, சரியாக 11 மணிக்கு அறிவிப்பை வெளியிட்டது.  இந்த டீசரில் ஸ்டைலாக குகைக்குள் நடந்து செல்லும்  நடந்து செல்லும் உள்ளே தனது ஆட்கள் ரவுடி அடியாட்களை அடித்து கொண்டுருக்கும் போது ஸ்டைலாக வேடிக்கை பார்த்துக்கொண்டு கைகாட்டுகிறார். தொடர்ந்து சூப்பர்ஸ்டார் டைட்டில் கார்டுடன் பழைய இன்ட்ரோ மியூசிக் ரீமிக்ஸோடு, கலக்கலாக ஆட்டுக்கொண்டே நடக்கும் ரஜினி பழைய முறுக்கு மீசை, என இன்னொரு கெட்டப்பை நோக்கி நகர்கிறது. அப்போது மரணம் மாஸு மரணம் என்ற பாடல் ஒலிக்க தனக்கே உரிய ஸ்டைலில் சிரித்துக்கொண்டே செல்கிறார். டீசர் முடியும் நேரத்தில் கூலர் மாட்டிக்கொண்டு நகரும் ஸீன் சான்ஸே இல்ல போங்க டீசர்.

டைட்டில் கார்டுல விண்டேஜ் மியூசிக்கோட ஆரம்பிக்குற பேட்ட தீம், கடைசில மரணமாஸ் பாட்டோட முடியுறதுனு. தலைவர மரண மாஸா காமிச்சிருக்கிங்க