இந்தியன் 2 எப்படி இருக்கு? சிம்பிளா ரிவ்யூ சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
“இந்தியன் 2 படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. வேட்டையன் பட வேலைகள் இன்னும் நடத்துகொண்டிருக்கின்றன” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
சமீபத்தில் கேரளா சென்றிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் திரும்பினார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவரிடம் கடந்த ஜூலை 12ஆம் தேதி வெளியான கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தைப் பாராட்டிப் பேசியுள்ளார். மேலும் தனது வேட்டையன் படம் குறித்த அப்டேட்டையும் வழங்கி இருக்கிறார்.
“இந்தியன் 2 படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. வேட்டையன் பட வேலைகள் இன்னும் நடத்துகொண்டிருக்கின்றன” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். பின்னர் தனது காரில் ஏறிப் புறப்படும்போது, ரசிகர்களை நோக்கி கை அசைத்து அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
சின்ன வயசுல தம்பிய பாசமா பாத்துக்கோங்க... தனுஷ் பற்றி பச்சையாகப் பேசி சிரிக்க வைத்த செல்வராகவன்!
1996ஆம் ஆண்டு கமல் வீரசேகரன் சேனாபதியாக நடித்த இந்தியன் படத்தின் தொடர்ச்சியா இந்தியன் 2 படம் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தப் படத்தில் கமல்ஹாசன், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தியன் 2 படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
ரஜினியின் 170வது படமான வேட்டையான் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ரஜினிகாந்தின் 73வது பிறந்தநாளில் வேட்டையன் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.
இப்படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
உங்களைப் பணக்காரராக மாற்றும் பொன் விதிகள்! லாபம் பல மடங்கு பெருக இதை ட்ரை பண்ணுங்க!