சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வெளியான திரைப்படம் 2 . 0 . சுமார் நான்கு வருடங்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் வேலைகள் கடந்த மாதம் தான் முடிவடைந்ததாக இயக்குனர் ஷங்கர் அறிவித்தார். இதை தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்தார்.

இந்நிலையில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படும் சந்தோஷத்தையும், தன்னுடைய மனைவியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் நவம்பர் 29 ஆம் தேதி தயாரிப்பாளர் சுபாஷ் கரண், சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி ஒன்று ஏற்படு செய்திருந்தார்.

இந்த பார்ட்டிக்கு தமிழ் திரையுலகை சேர்த்த பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அனைவரும் கலந்து கொண்ட இந்த பார்ட்டியில் 2 .0  படத்தின் ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் கலந்து கொள்ளவில்லை. 

இந்தத்தகவல் வெளியானதும், அடுத்ததாக ரஜினியை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ள படம் லைகாவிடம் இருந்து வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு கைமாறியது தான் காரணம் என தகவல் வெளியானது. 

இந்நிலையில் இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில் ரஜினிக்கு ஒரு சில வேலைகள் இருந்ததால் மட்டுமே அவரால் சுபாஷ் கரண் நடத்திய பார்ட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும், ஏ.ஆர்.முருகதாஸ் படம் கைமாறவில்லை என்றும் கூறப்படுகிறது.