Rajinikanth meets fans again official date announced

மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எந்த தேதியில் ரசிகர்களை சந்திக்கிறார் என்பதையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்போது, கிட்டத்தட்ட 15 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார். அதன் பிறகு மற்ற மாவட்ட நிர்வாகிகளை பிறகு சந்திப்பதாக அறிவித்தார்.

பின்னர் சங்கரின் 2.0, பா.ரஞ்சித்தின் காலா ஆகிய படங்களில் தொடர்ச்சியாக பிஸியாகிவிட்டதால், ரசிகர்களை சந்திக்க கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

தற்போது படபிடிப்புகள் முடிந்துவிட்டதால், மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராகிவிட்டார் ரஜினி. இதற்காக வரும் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ஆறு நாள்கள் ரசிகர்களைச் சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 7 மணி முதல் 3 மணி வரை இந்த சந்திப்பு நிகழ்கிறது.

ஆறு நாள்கள் நடக்கும் இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் போது தினமும் 1000 ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள இருக்கிறாராம்..