rajinikanth meet fans

நாளை ரசிகர்கள் உடனான சந்திப்பில் அரசியலுக்கு வருவதற்கான அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிட வாய்ப்புள்ளதால் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். நடிகர்கள் அரசியலுக்கு வருவது புதிதல்ல.எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி தற்போது உள்ள விஜய், விஷால் வரை அரசியல் ஆசை உள்ளவர்கள் ஏராளம்.

அதிலும் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கான அறிவிப்பை எப்போது சொல்லுவார் என காத்திருக்கின்றனர் அவருடைய ரசிகர்கள். ஆனால் அவரோ அவருடைய படத்தில் ”நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் ”என பஞ்ச் வசனம் பேசுவார் . அதுபோல அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.


ஆனால் கடந்த மேமாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், ”சிஸ்டம் சரியில்லை” ”போர் புரிய தயாராக இருங்கள்” என ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிலையில் ”போர் புரிய” ஆவலோடு இருந்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. ரஜினியின் பிறந்தநாளன்று வருவதாக இருந்த அரசியல் அறிவிப்பு வெளியாகவில்லை.


 நாளை முதல் இந்த மாதம் 31ம் தேதி வரை ரசிகர்களை ரஜினி சந்திக்கவிருப்பதாகவும், செய்தியாளர்கள் சந்திப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.
அப்போது ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.மேலும் அவர் தனது அரசியல் கட்சியை வரும் 2018ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி தொடங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிசம்பர் மாதம் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.நாளை என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.