rajinikanth meet fans
ரஜினி ரசிகர்கள் பரபரப்பாக எதிர்பார்த்திருக்கும் அடுத்த ரசிகர் சந்திப்பு இதோ தயாராகிவிட்டது. எத்தனை நாட்கள்..? எந்தெந்த மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்..? இதோ பட்டியலைப் பாருங்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட வாரியாக அவருக்குச் சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது அனைவரையும் போருக்கு தயார் ஆகுங்கள் என கட்டளையிட்டு, தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாகத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து படப் பிடிப்பில் பிஸியாக இருந்த அவர் மீண்டும் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாயின.

தற்போது அதை உறுதி செய்யும் வகையில், வரும் 26 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து 6 நாட்கள் ரசிகர்களை சந்திக்க உள்ளார். அவர் எந்தெந்த மாவட்ட ரசிகர்களை என்று சந்திக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ரஜினி ரசிகர்களை சந்திக்கும் பட்டியல்..

26/12/17 காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி.
27/12/17 நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்.
28/12/17 மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம்.
29/12/17 கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு.
30 & 31/12/17 வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

