சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில், டிஸ்கவரி சேனல் நடத்தி வரும் மேன் VS வைல்ட் நிகழ்ச்சியில், தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்சுடன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சி இம்மாதம் மார்ச் 23ஆம் தேதி இரவு 8 மணி அளவில் ஒளிபரப்பாக உள்ளது.  மேலும் இந்த நிகழ்ச்சி குறித்த தொலைக்காட்சி அடிக்கடி சில புரோமோக்களை வெளியிட்டு,  இந்த நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் பியர் கிரில்ஸ் வாயடைத்து போகும் அளவிற்குக்கு, அட்வெட்சர்  செய்து அசத்தியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

"காட்டுக்குள் சென்ற போது, சரியான சாலை வசதி இல்லாததால் மிகப்பெரிய இரும்பு பாலத்தை பிடித்து தான் இருவரும் கிடக்கின்றனர். பின்னர் ரஜினிகாந்த் தண்ணீர் பிரச்சினை பற்றி ஆழமாகப் பேசுகிறார். அப்போது ரஜினிகாந்த் இந்தியாவில் தண்ணீர் பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது என தெரிவிக்கிறார்.

இதையடுத்து ரஜினிகாந்தின் ஆரம்ப கால வாழ்கை, அதாவது 18 , 19 வயதில் அவர் எப்படி இருந்தார் என பியர் கிரில்ஸ் கேட்க,  ஒரு பஸ் கண்டக்டராக வேலை செய்ததாகவும், பின்னர்  ஃபிலிம் சிட்டியில் படித்து இயக்குனர் பாலசந்தர் மூலம் நடிகராக ஆனதாகவும் தெரிவிக்கிறார்.

குடும்பத்தில் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த  ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடித்து முடித்ததும் நான் ரஜினிகாந்த் என்பதை மறந்து விடுவேன். சிவாஜி ராவ்வாக மட்டுமே குடும்பத்திடம் இருப்பேன் என கூறி யாராவது நினைவு படுத்தினால் மட்டுமே மீண்டும் நான் ரஜினிகாந்த் என்கிற நினைவு தனக்கு வரும் என தெரிவிக்கிறார்.

இருவரும் ரோப் உதவியுடன் ஒரு மலையை ஏறும் காட்சி காட்டப்படுகிறது. மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வழியாக சூப்பர்ஸ்டார் எந்த மலையை ஏறி முடித்ததும், மூச்சு வாங்க இதுதான் அட்வென்சர் என சிலாகிக்கிறார். 

ரஜினிக்கு ஷூ லேஸ் கட்டிவிட்டு, இப்போதும் நீங்கள் பிட்டாக இருக்கிறீர்கள் என்று கூறி, ரஜினியின் வயதை கேட்கிறார் பியர் கிரில்ஸ். 70 என தலைவர் கூறியதும் வாயடைத்து போகிறார் தொகுப்பிழார் கிரில்ஸ். 

இது குறித்த வீடியோ காட்சி இதோ...