Superstar rajinikanth special: ரஜினிகாந்த பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சியளிக்க முடிவு செய்துள்ளனர்....
கர்நாடக தலைநகரான பெங்களுரில் கடந்த 1950 -ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி மராத்திய குடும்பத்தில் பிறந்தவர் சிவாஜி ராவ் கெய்க்வாட். கன்னட மொழி பின்னனியில் வளர்க்கப்பட்ட இவர் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்த ராமோஜி ராவ் கெய்க்வாட் என்பவருக்கு 4 பிள்ளைகளில் ஒருவராக பிறந்தார்.
இன்று தனது 71 வது பிறந்தநாளை கொண்டாடும் சூப்பர்ஸ்டார் அவர்களுக்கு ரசிகர்கள் திரைபிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், சமூக வலைத்தளங்களில் ரஜினி பிறந்த நாளுக்காக #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், தனது 72-வது பிறந்த நாளில் அனைவரும் வியக்கும் வகையில் ஒரு நல்ல திட்டத்தை ரஜினிகாந்த் தொடங்க உள்ளார்.
ஏழை - எளிய குடும்பங்கள் மற்றும் சமூகத்தின் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளார். இதற்காக Rajinikanth Foundations என்ற பயிற்சி அமைப்பை ரஜினிகாந்த் தொடங்க உள்ளார். இத்திட்டம் வழக்கறிஞர் எம் சத்திய குமாரால் நிர்வகிக்கப்படும் என அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ளார்.
